- Advertisement -
மலையாளத்தில் பிரபலமான நடிகர் சஜித் பட்டாளம் (54) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் உடல்நல குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் டோவினோ தாமஸ் நடித்த “கள”, நிவின் பாலி நடித்த கனகம் காமினி கலகம், ஜான் இ-மான் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சில வெப் சீரிஸ் களில் நடித்துள்ளார்.உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்த இவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -