அஜித்திற்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் நடிகரின் தீவிர ரசிகரா ! அந்த பிரபலம் யார் தெரியுமா ?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இந்தியளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் வலிமை படத்தை தொடர்ந்து அஜித் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் வங்கி கொள்ளை குறித்த திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் அப்படத்தின் ஷூட்டிங்கில் அஜித் இம்மாதம் இணைவார் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையே நடிகர் அஜித் குறித்த இந்த ஒரு சுவாரஸ்யமான விஷயமாக இருந்தாலும் அது ரசிகர்கள் மத்தி வேகமாக பரவி வரும், அதன்படி நடிகர் அஜித் யாரின் ரசிகர் என்பது குறித்த தககல் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

ஆம், நடிகர் அஜித் ஹாலிவுட் திரைப்படம் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ ரசிகராம், அவர் நடித்த The Wolf Of Wall Street திரைப்படம் அவருக்கு மிகவும் பிடிக்குமாம். இதனை இயக்குநரும் நடிகருமான ரா. பார்த்திபன் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.