கோலிவுட் பவர் ஜோடி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜூன் 9 அன்று சென்னை மகாபலிபுரத்தில் கோலாகலமான விழாவில் மோதிக்கொண்டனர்.இந்த ஜோடி ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக டேட்டிங் செய்து, இறுதியாக சரிவை எடுத்தது.அவர்களது திருமணத்தின் ஸ்ட்ரீமிங் விவரங்களைச் சுற்றி நிறைய நிச்சயமற்ற நிலை ஏற்பட்ட பிறகு, நெட்ஃபிக்ஸ் உரிமையைப் பெற்றுள்ளது என்பது இறுதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.
கடந்தாண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதனை ஒரு பேட்டியில் நயன்தாரா கூறியிருந்தார். இந்நிலையில், மகாபலிபுரத்தில் ஜுன் 9ம் தேதி முகூர்த்தத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றது.
மகாபலிபுரத்தில் நடக்கும் திருமணத்திற்கு மிக குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியது.
இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. விக்னேஷ் சிவன் – நயன்தாரா பொருத்தம் சூப்பர் என ரசிகர்கள் புகைப்படங்களை பகிர்ந்து கமெண்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
விக்னேஷ் சிவன் நயன்தாரா பிரஸ் மீட் வந்து செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது எதிர்காலத்திற்கு அனைவரது ஆசிர்வாதமும் தேவை என கூறி நன்றி கூறினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.
புதுமணத் தம்பதியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கேரளாவின் திருவல்லாவில் வசிக்கும் நயன்தாராவின் தாயார் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆசி பெற நட்சத்திர ஜோடி வந்தனர். கொச்சியில் உள்ள பழமை வாய்ந்த கோவில் ஒன்றில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தரிசனம் செய்தனர்.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தாய்லாந்து நாட்டுக்கு ஹனிமூன் ட்ரிப் சென்றுள்ளனர். தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எடுத்த புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், ஹனிமூன் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய விக்கி – நயன் ஜோடி, வீட்டுக்கு கூட வராமல் நேராக அட்லீ இயக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்புக்கு நயன்தாரா சென்றார். தற்போது, இன்றோடு இவர்கள் திருமணம் முடிந்து 1 மாதம் ஆன நிலையில் விக்னேஷ் சிவன் சில போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
அதில், ஷாருக்கான், அட்லீ, விக்னேஷ் சிவன், நயன்தாரா, ரஜினிகாந்த், மணிரத்னம் உள்ளனர். இதனை நெகிழ்ச்சியாக விக்னேஷ் சிவன் பகிர்ந்தார். பின்னர், சூர்யா – ஜோதிகா, விஜய் சேதுபதி தனது மனைவியுடன் வந்து திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். எஸ்.ஜே.சூர்யா, அட்லீ, விஜய் சேதுபதி, ஷாருக்கான், அனிருத், விக்னேஷ் சிவன், நயன்தாரா ஒன்றாக எடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டார்.
இவர்களது திருமணத்திற்கு 200 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில் 30 விவிஐபிக்களும் அடங்குவர். அவர்களுக்கு தரப்பட்ட பத்திரிக்கையில் கியூ ஆர் கோடு கொடுக்கப்பட்டிருந்தது. டைட் செக்யூரிட்டி உடன் நடைபெற்ற இவர்களது திருமணம் குறித்த எந்த புகைப்படமோ, காட்சியோ வெளியாகாமல் இருக்கவே இந்த பாதுகாப்பை தம்பதிகள் ஏற்படுத்தியிருந்தததாக சொல்லப்பட்டது.
தங்களது திருமணத்தை பிரபல ஓடிடி தளமான netflix மூலம் வெளியிட முடிவு செய்த நயன்தாரா விக்னேஷ் சிவன் அந்த நிறுவனத்துடன் சுமார் 25 கோடி வரை விலை பேசி இருந்தனர். ஆனால், தற்போது, netflix நிறுவனம் அந்த டீலில் இருந்து பின்வாங்கி விட்டதாக தெரிகிறது. விலை அதிகம் என கூறி அந்நிறுவனம் இந்த deal’ஐ நிராகரித்ததாக சொல்லப்பட்டது.
மேலும், விக்னேஷ் சிவன் தங்களது திருமண புகைப்படங்களை திருமணம் ஆகி 1 மாதம் ஆன நிலையில் வெளியிட்டிருந்தார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண ஒளிபரப்பு விஷயத்தில் இருந்து அதிரடியாக netflix பின்வாங்கிவிட்டதாக தகவல் வெளியானது.
தங்களின் ஒப்பந்தத்தை மீறியதை சுட்டி காட்டி நெட்பிளிக்ஸ் நிறுவனம் நயன்தாராவின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும், அதில் திருமணத்திற்கான செலவு தொகை மற்றும் திருமண வீடியோவுக்கான செலவுத்தொகையை திருப்பி தரவேண்டுமென தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
நயன் – விக்கி இருவரும் திருமண உடைகள் போன்ற தங்களின் செலவை தவிர, மற்ற எந்த செலவும் செய்யாமல், ஓசியில் திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இப்படி ஒரு நோட்டீஸ் நெட்பிளிக்ஸ் தரப்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் திரையுலகினர் மத்தியில் பேச்சு பொருளாக மாறியது. இந்நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் – நயன்தாரா எடுத்துள்ள கடற்கரை போட்டோஷூட் புகைப்படங்களை netflix தனது அதிகாரபூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
These images of Nayanthara and Vignesh have us seeing stars 🤩✨
BRB, we're doing a little happy dance ourselves because THEY’RE coming to Netflix🕺💃it’s beyond a fairy tale!! pic.twitter.com/14poQwNAZv
— Netflix India (@NetflixIndia) July 21, 2022