Thursday, May 2, 2024 10:41 am

AK 62 படத்தில் 16 வருடத்திற்கு பின் அஜித் கூட்டணியில் இணைந்த முரட்டு வில்லன் ! லேட்டஸ்ட் ரிப்போர்ட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மாஸ் ஹீரோவின் புதிய படம் ‘ஏகே62’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். விக்னேஷ் சிவன் இயக்குனராக சில மாதங்களுக்கு முன்பு இந்த திட்டம் முதலில் அறிவிக்கப்பட்டது, ஆனால் அவர் படைப்பு வேறுபாடுகள் காரணமாக விலகினார் மற்றும் அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி வந்துள்ளார்.

விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் ஆர்வமுடன் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இதுவே எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து அவ்வப்போது வெளியாகும் போட்டோக்களும் ரசிகர்களை குஷிபடுத்திக் கொண்டிருக்கிறது.

இப்படி மீடியாவின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கும் லோகேஷ் இந்த படத்தின் மூலம் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இது ஒரு புறம் இருந்தாலும் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்திற்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.

சினிமா ரசிகர்கள் தான் அவ்வப்போது இந்த திரைப்படம் குறித்த ஏதாவது ஒரு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏகே 62 திரைப்படத்தை மகிழ் திருமேனி தான் இயக்கப் போகிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் பட குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது பற்றியும் எந்த செய்தியும் வெளிவரவில்லை.

இதனாலேயே அஜித் ரசிகர்கள் மிகப்பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் இதற்கு முக்கிய காரணம் ஏகே 62 திரைப்படத்தை லியோவை மிஞ்சும் அளவுக்கு கொண்டு போக வேண்டும் என்பதுதான் தயாரிப்பாளரின் திட்டமாம். அதற்காகவே ஸ்பெஷலான ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிடுவதற்கு அவர் பிளான் செய்திருக்கிறார்.

ஏனென்றால் சமீபத்தில் லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி பட்டையை கிளப்பி இருந்தது. தற்போது அதையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு ஒரு விஷயத்தை செய்ய லைக்கா நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. ஆனால் அஜித் ப்ரோமோ வீடியோ வெளியிட்டால் ரொம்பவும் தாமதம் ஆகிவிடும். அதனால் படத்தின் பெயரை மட்டும் அறிவித்துவிட்டு நேரடியாக படப்பிடிப்பை ஆரம்பித்து விடலாம் என்று கூறியிருக்கிறார்.

இப்படி தயாரிப்பாளர் ஒரு பிளான் போட்டிருக்கும் நிலையில் அஜித் அதை வேறு மாதிரி கூறியிருப்பது பட குழுவில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் அஜித்தின் முடிவுப்படி விரைவில் படத்தின் பெயரை படு மாஸாக அறிவித்துவிட்டு ஷூட்டிங்கை ஆரம்பிக்க இருக்கின்றனர். இதுதான் தற்போது திரையுலகின் சூடான செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க தமிழில் பிரபல நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அஜித்துடன் ஆசை, ராசி, பரமசிவன் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கிட்டத்தட்ட 16 வருடம் கழித்து மீண்டும் அஜித் கூட்டணியில் இணைகிறார்.

இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக திருமணம் செய்து கொண்ட காஜல், தற்போது ஒரு வயதாகும் தனது மகனைப் பெற்றெடுத்தார். அதன் பிறகு மீண்டும் மீண்டும் வந்த அவர் தற்போது கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கருங்காப்பியம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். ‘ஏகே 62’ படத்தில் அவர் ஈடுபடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மாதத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காத்திருங்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்