Sunday, April 28, 2024 11:12 pm

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா வி.ஜே ரம்யா..? வைரலாகும் புகைப்படம்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல தொகுப்பாளினி ரம்யா, பிரபல கிரிக்கெட் வீரரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரவி வரும் நிலையில், அதன் உண்மை பின்னணியை பார்ப்போம். சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினி விஜே ரம்யா. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதுதவிர, அவ்வப்போது சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் ரம்யா, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, வனமகன், ஆகாசம், மாஸ்டர், கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2014ம் ஆண்டு அபராஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்த ரம்யா தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார். விவாகரத்துக்குப் பிறகு ஃபிட்னஸுக்கு வந்த ரம்யா, உடல் எடையை குறைத்து மெலிதான தோற்றத்தைப் பெற்றுள்ளார்.சமீபத்தில், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழும் ரம்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு காட்டுத்தீ போல வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், ரம்யா, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குடன் ஜோடியாக போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படத்தை ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, தனது இரண்டாவது மனைவியுடன் தினேஷ் கார்த்திக் என தலைப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் யாரோ ஒருவர் கிளப்பிவிட்ட வதந்தியை உண்மை என நினைத்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் உண்மையில் தினேஷ் கார்த்திக்கிற்கு திருமணமாகி தீபிகா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். மேலும் வி.ஜே ரம்யா அவரது இரண்டாவது மனைவி என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்