Monday, April 29, 2024 3:29 am

அவரச அவரசமாக ரீஷூட் செய்தாரா லோகி !லியோ படத்தில் நீக்கப்பட்ட காட்சியால் ஏற்பட்ட புதிய சர்ச்சை

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விஜய் நடித்த லியோ திரைப்படம் உலக அளவில் ரூ.500 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியான 12 நாட்களில் இப்படம் ரூ.540 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த செய்தியை தயாரிப்பாளர்கள் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவித்துள்ளனர். வெளியான முதல் நாளிலேயே, லியோ ரூ. 148.5 கோடிகளை சம்பாதித்து, இந்தியத் திரைப்படம் ஒன்றின் உலகளாவிய மொத்த வசூல் என்ற புதிய சாதனையைப் படைத்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய, விஜய்-நடித்த படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும், இது ஏற்கனவே கைதி (2019) மற்றும் விக்ரம் (2022) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, த்ரிஷா, மிஸ்கியின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

லியோ திரைப்படத்தில் லியோ-வின் ஃப்ளாஷ்பாக் என்ன என்று இருதயராஜ் டிசோசா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த மன்சூர் அலிகான் காவல் துறை அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனனிடம் கூறிய கதை போலியானதாக கூட இருக்கலாம் என்று சமீபத்திய பேட்டியில் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு இந்த கேள்வி இருந்தது. அதன் பிறகு, படத்தில் பணியாற்றிய இயக்குனர் ரத்தினகுமார் இதனை உறுதிப்படுத்தும் விதமாக சில பதிவுகள் எழுதியிருந்தார். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

இதற்கு ஆதாரமாக மன்சூர் அலிகான் நீக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது படக்குழு. இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் லியோ படத்தின் இயக்குனர்,. தலைவர் 171 படத்தின் இயக்குனர், ஆனால் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் முட்டு பாயாக மாறிவிட்டார் லோகேஷ் கனகராஜ் என்று கலாய்த்தார்.

மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் பல இணையவாசிகள் மற்றும் வலைப்பேச்சு அந்தணன் இவருடைய இந்த பேச்சை கலாய்க்க ஆரம்பித்தனர். இது ஒரு பக்கம் இருக்க வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல லோக்கி பொய் சொல்ல மாட்டார் பா என்று அதிரடியாக விளக்கம் கொடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் லியோ படத்திலிருந்து நாங்கள் நீக்கிய காட்சியை பாருங்கள் என்று மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது படக்குழு.

கைதி திரைப்படத்தை மன்சூர் அலிகான் ஹீரோவாக வைத்து கதை எழுதிய லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்து இருக்கிறார்.

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோவை வைத்து விருமாண்டி படத்தில் பசுபதியின் கதாபாத்திரம் பிளாஷ்பேக்-ஐ கூறும் போது கமல்ஹாசன் கெட்டவன் போல சித்தரிக்கப்பட்டிருக்கும்..ஆனால், கமல் தன்னுடைய பிளாஷ்பேக்கை கூறும்பொழுது தான் கமல்ஹாசன் எவ்வளவு நல்லவர் என்பது தெரியும். அதைப்போலத்தான் லியோ படக்குழு இருதயராஜ் டிசோசா சொன்னது ஒரு போலியான பிளாஸ் பேக் கதை என நிறுவ முயற்சி செய்கிறது.

மன்சூர் அலிகான் கதாபாத்திரம் கூறக்கூடிய வசனம் இதுதான், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பர்ஸ்பெக்டிவ் இருக்கும்.. இது என்னோட பர்ஸ்பெக்டிவ் என்று லியோவின் ஃப்ளாஷ் பேக்கை தன்னுடைய பார்வையிலிருந்து கூறுவதாக கூறுகிறார்.

அப்படி என்றால் உண்மையான விஷயம் வேறாக கூட இருக்க வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து லியோ படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து இண்டஸ்ட்ரியல் ஹிட் படமாக மாறி இருக்கிறது இல்லையோ என் நிலையில் தாராளமாக லியோவின் இரண்டாம் பாகத்தை உருவாக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மறுபக்கம் அப்படி என்றால் லியோ படத்தின் இரண்டாம் பாகம் முழுதும் போலியானது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக, திரைப்படம் என்பதே ஒரு போலியான விஷயம் தான் அந்த போலியான விஷயத்தில் போலியான விஷயத்தை கூறினோம் என ரசிகர்களை ஏமாற்றுவது எந்த வகையில் நியாயம்.

200 ரூவா கொடுத்து படம் பார்க்கும் நாங்கள் என்ன முட்டாள்களா..? தியேட்டரில் ஒரு படத்தை காட்டிவிட்டு இங்கு யூட்யூபில் இன்னொரு படத்தை காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்..?

மேலும், படத்தில் இடம் பெற்ற மன்சூர் அலிகான் உடையும், இப்போது வெளியாகியுள்ள காட்சியில் மன்சூர் அணிந்துள்ள உடையும் வேறு வேறாக இருக்கிறது. ரசிகர்களை ஏமாற்ற ரீ-ஷூட் பண்ணியிருக்கீன்களா..? பார்த்தியா மறுபடியும் எங்களை ஏமாத்துற பார்த்தியா… என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

அக்டோபர் 19ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான வரவேற்பைப் பெற்றது. படத்தின் CE மதிப்பாய்வில் இருந்து ஒரு பகுதி கூறுகிறது, “இந்த சுவாரஸ்யமான முதல் பாதியில், லோகேஷ் கனகராஜ் ஹீரோவை மையமாகக் கொண்ட திரைப்பட வடிவமைப்பின் பல விதிகளை மீறுகிறார். விஜய் இந்த கிட்டத்தட்ட பைத்தியக்கார மனிதராக நடிப்பதில் உண்மையிலேயே முதலீடு செய்திருப்பது போல் உணர்கிறேன். துண்டிக்கப்பட்ட விளிம்புகள்.”

இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

லலித் குமாரின் 7ஸ்கிரீன் ஸ்டுடியோவின் ஆதரவுடன், 2021 இல் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரின் இரண்டாம் ஆண்டு கூட்டுப்பணியை லியோ குறிக்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்