Sunday, April 28, 2024 1:59 pm

இப்போவும் “ஓப்பனிங் கிங் நான் தான் ” அசைக்க முடியாத இடத்தில் அஜித்! திணறும் லியோ!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விழாவை நவம்பர் 1-ம் தேதி பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு, அதன் தயாரிப்பாளர்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நுழைவு சீட்டுகள் அல்லது பார்கோடு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுடன் அழைக்கப்பட்டவர்களை மட்டுமே வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்குமாறு அமைப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வி.வி.ஐ.பி.க்களுக்கு போதுமான கார் பார்க்கிங்கை தயார் நிலையில் வைத்திருக்கவும், டிக்கெட்டுகள் நகல் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் அமைப்பாளர்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலகம் முழுவதும் பல கோடிகளை வசூல்செய்து சாதனை படைத்தது வந்தாலும் தமிழகத்தில் பெரிய அளவில் வசூலை குவிக்காமல் திணறி வருகிறது. தமிழ் சினிமாவில் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் 3-வது இடத்தை பிடித்தாலும் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் 5-வது இடத்திற்கு அடுத்த படியாக தான் இருக்கிறது.தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் தமிழகத்தில் மட்டும் இதுவரை மொத்தமாக அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக பொன்னியின் செல்வன் 1, விக்ரம், பாகுபலி 2, ஆகிய படங்கள் அடுத்தடுத்து இடங்களில் இருக்கிறது.

5-வது இடத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது. அந்த வசூலை கூட இன்னும் தமிழகத்தில் லியோ படம் முறியடிக்கவில்லை. லியோ திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், இதுவரை தமிழகத்தில் லியோ திரைப்படம் 108 கோடி வரை வசூல் செய்துள்ளது.

படத்திற்கு கிடைத்து வந்த வரவேற்பு குறைந்த காரணத்தால் படத்தின் வசூலும் குறைந்துள்ளது. இருப்பினும் இதற்கு முன்பு தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள் என்ற சாதனையை படைத்துள்ள படங்கள் எல்லாம் வெளியாகி வெற்றிபெற்று விட்டது. லியோ படம் வெளியாகி 11 நாட்கள் கிட்ட தான் ஆகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் செட் செய்த ரெக்கார்டை உடைக்க முடியாமல் திணறி வருகிறது லியோ திரைப்படம்.

வலிமை திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 957 திரைகளில் வெளியானது. ஆனால், லியோ திரைப்படம் தற்போது வரை 850 திரையரங்குகள் மட்டுமே பெற்று இருக்கிறது.

லியோ திரைப்படம் நாளை (அக்.19) வெளியாக உள்ள நிலையில் இன்னும் 20 திரைகள் கூடுதலாக கிடைக்கலாம் எனவும், ஆனால் 900 திரைகள் என்ற இலக்கை கூட லியோ திரைப்படம் எட்டாது என கணித்திருக்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் ஜோதிடர்கள்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் மோதிய போதும் கூட நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்தன. முதல் நாள் வசூலும் விஸ்வாசம் திரைப்படத்திற்கு தான் அதிகமாக கிடைத்தது.

நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் படத்துடன் மோதி இப்போதும் நான் தான் ஓப்பனிங் கிங் என்பதை நிரூபித்தார் நடிகர் அஜித்குமார்.

தற்போது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் போதும். நான் தான் ஓப்பனிங் கிங் என்பதை ஆணித்தரமாக அடித்து கூறி இருக்கிறார்.

லியோ திரைப்படத்திற்கான திரைகளின் எண்ணிக்கை கூடுமா..? வலிமை ரெக்கார்டை தகர்க்குமா லியோ..? பொறுத்திருந்து பார்க்கலாம்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், அர்ஜுன் சர்ஜா, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘லியோ’. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, கிளாசி காட்சிகளை மனோஜ் பரமஹம்சா கைப்பற்றினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்