Sunday, April 28, 2024 7:58 am

துணிவு படம் காட்டிய பயத்தால் லியோ படத்தில் ஏற்பட்ட மாற்றம் ! மீண்டும் கிங் என நிரூபித்த அஜித் !லலித் குமார் கூறிய உண்மை !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள இரண்டாவது படம் ‘லியோ’. இந்த படத்தின் திரைக்கதையை லோகேஷ், ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி எழுதியுள்ளனர். விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த அதிரடி பொழுதுபோக்கு திரைப்படம். மேத்யூ தாமஸ், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் மற்றும் பலர் துணை வேடங்களில் காணப்பட்டனர்

இந்நிலையில், அதே கதையை இயக்குநர் லோகேஷ் கனகராஜும் சமீபத்திய பேட்டியில் சொல்லி மீண்டும் தான் எடுத்த லியோ கதை தரமான கதை தான் என முட்டுக் கொடுக்க வந்து விட்டார் என ரஜினி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் அண்ணா உட்ருண்ணா என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.லியோ படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜை எந்தளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ படுத்தி வரும் ரஜினி ரசிகர்கள் அடுத்து தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் எடுக்கும் போது, அவர் போல ஒரு ஜீனியஸ் டைரக்டரே இல்லை என புகழத்தான் போகின்றனர்.ஜெயிலர் பட இயக்குநர் நெல்சனுக்கும் அதே கதை தானே நேர்ந்தது என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், கேஃபே சண்டைக்கு பிறகு உள்ளுக்குள் இருந்த லியோ வெளியே வந்து விட, அதன் பின்னர் யார் பார்த்திபன் என அழைத்தாலும் விஜய் திரும்ப மாட்டார் என்றும் இரண்டு மூன்று முறை கூப்பிட்டால் தான் பார்ப்பார் என்றும் இன்னொரு கதையையும் லோகேஷ் கனகராஜ் உருட்டி உள்ளார்.

பகத் ஃபாசில் மற்றும் லியோ இருவரும் ஒரே ஆசிரமத்தில் இருந்து வளர்ந்தவர்கள் தான் என்றும் இதெல்லாம் புரிய லியோ 2 அல்லது விக்ரம் 3 படம் வந்தால் தான் தெரியும் என்கிற அளவுக்கு பில்டப் செய்து தனது எல்சியூவை காப்பாற்ற முயற்சித்து வருகிறார்.இன்னொரு பக்கம், லியோ படம் 500 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இது உண்மையிலேயே வசூல் செய்யப்பட்டதா? என்று தெரியவில்லை. அவரிடம் போய் யாராவது கணக்கா கேட்கப் போகிறார்கள்? தமிழகத்தில் 60 முதல் 70 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்த்திருக்கிறார்கள் என்று பலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடைபெற்ற ‘ஜப்பான்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் ‘லியோ’ திரைப்படத்தின் வசூல் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிகழ்வில் லோகேஷ் பேசியதாவது: ஒரு இயக்குநரின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட வேண்டுமெனில் அதறகான பரிசோதனை முயற்சிக்கு ஒரு பெரிய நடிகர் தயாராக இருக்க வேண்டும். என்னுடைய கரியரில் அப்படியானவர் கார்த்தி. அவருடைய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது எனக்கு பெருமை. மார்ச் அல்லது ஏப்ரலில் ரஜினி உடனான படம் தொடங்கும்.

இன்னும் ஓரிரு நாட்களில் ‘லியோ’ சக்ஸஸ் மீட்‌ குறித்த அப்டேட் வரும். படத்தின் வசூலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அது தயாரிப்பாளார் தொடர்புடைய விஷயம். மக்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதுதான் முக்கியம். திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாக இருப்பதாக கலவையான விமர்சனங்களும் வருகின்றன. அதையும் ஏற்றுக் கொள்கிறேன்” இவ்வாறு லோகேஷ் கனகராஜ் பேசினார்.

மேலும் லியோ படம் பார்த்து விஜய் என்ன சொன்னார் என கேட்டதற்கு, விஜய் ரொம்ப ஹாப்பியாக இருக்கிறார் என்றும், நான் தியேட்டர் விசிட்டின் போது காயமடைந்ததை அறிந்து போன் பண்ணி விசாரித்தார். இன்னும் அவரை நேரில் பார்க்கவில்லை என கூறினார். அதுமட்டுமின்றி லியோ தான் 5 ஆண்டுகளுக்கு முன்னர் பண்ணிய கதை என்றும் அதில் தேவையில்லாத மாற்றங்களை செய்யாமல் முடிந்தவரை அப்படியே படத்தை எடுத்துள்ளதாக கூறினார்

இறுதியாக கைதி 2 படம் பற்றி பேசிய லோகேஷ். இது நிச்சயம் ஸ்டிராங் ஆன படமாக இருக்கும் என கூறினார். மேலும் அதில் எல்லாருடைய பங்களிப்பும் கைதி 2-வில் ஸ்டிராங்கா இருக்கும் என்றும் லோகேஷ் ஒரு ஹிண்ட் கொடுத்துள்ளார். இதனால் ஏற்கனவே எல்சியுவில் உள்ள ரோலெக்ஸ் சூர்யா, விக்ரம் கமல், லியோ தாஸ் விஜய் ஆகியோரின் கேமியோ இப்படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கைதி 2 படத்துக்கு அடுத்ததாக சூர்யாவை வைத்து தான் ரோலெக்ஸ் படம் பண்ண உள்ளதாகவும் லோகேஷ் அந்த விழாவில் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் துணிவு படம் நிறைய பேர தூங்க விடாம பண்ணியிருக்கு! இன்னும் இந்த விஜய் ரசிகர்கள் எல்லாம் வாரிசு வெற்றினு சொன்னா வாய்லயே அடிங்க! துணிவு ரியல் பொங்கல் வின்னர்! ரசிகர்கள் இதை ட்ரெண்ட் செய்து காட்டி வருகின்றனர் !

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் வெளியானதில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் செய்தியாளர்களுடன் உரையாடியபோது, ​​படத்தின் வெற்றியாளர் சந்திப்பை விரைவில் நடத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ‘லியோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தற்போது தமிழக காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்