Sunday, April 28, 2024 12:11 am

லியோ படத்தால் மண்ணை கவ்வி படுதோல்வியை சந்தித்த விஜய் ! லியோ படம் பிளாப் ஆக இதுதான் காரணமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் இயக்கிய லியோ திரைப்படம் இன்று மிரட்டல்களை சந்தித்துள்ளது. தளபதி விஜய், த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் சர்ஜா, கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள லியோவில் சஞ்சய் தத் ஒரு முக்கிய வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது, மேலும் படத்தில் தளபதி விஜய் மற்றும் சஞ்சய் தத்தின் முகத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

சுவாரஸ்யமாக, லியோ பார்வையாளர்களிடையே கணிசமான சலசலப்பை உருவாக்க முடிந்தது மற்றும் வெளியீட்டிற்கு முன்பே சாதனைகளை படைத்து வருகிறது. ஜவானின் தொடக்க நாள் முன்பதிவு அறிக்கைகளை முறியடிப்பது முதல் வெளியான முதல் நாளிலேயே 100 கோடியைத் தாண்டும் என்ற யூகங்கள் வரை, லியோ பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் லியோ திறக்கப்பட்ட நிலையில், தளபதி விஜய் நடித்த இந்த படம் பற்றி பார்வையாளர்கள் கூறுவது இதோ:

ஒருவழியாக, அத்தனை பிரச்சினைகளையும் சமாளித்து படத்தை வெளியிட்டால், ‘ஆர்டினரி மேன்’ சாங் காப்பி, படத்தின் கதை காப்பி என பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒருபுறம் விஜய் ரசிகர்கள் லியோ ரிலீஸ் ஆனதிலிருந்து படத்தை தியேட்டரில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். மறுபக்கம், நெட்டிசன்கள் மீம்ஸ் மூலமாக படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை வாரி இறைத்து வருகின்றனர்.

இந்த நெகட்டிவ் விமர்சனங்களால் லியோ ஓடாமல் போய் விடுமோ என்ற கலக்கத்தில் விஜய் ரசிகர்கள் இருக்கின்றனர். அதேசமயம், படத்தின் வசூல் குறித்தும் பல்வேறு தகவல்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, படத்தின் தயாரிப்பு நிறுவனம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 148.5 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

ஆனால், அதற்கடுத்து தினசரி வசூல் விவரங்களை வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் ‘வசூலில் லியோ ஜெயிலர் படத்தின் சாதனையை முறியடிக்க முடியாமல் திணறுது போல, அதனாலதான் அடுத்தடுத்த நாள்களில் வசூல் விவரங்களை வெளியிடவில்லை’ என்று விமர்சித்து வந்தனர். மேலும், ஜெயிலரா, லியோவா என்று ரஜினி-விஜய் ரசிகர்கள் இணையத்தில் விவாதப் போர் நடத்தி வந்தனர்.

விஜய் ரசிகர்கள் பலரும் லியோ வசூல் சாதனையை முறியடிக்கும் என்று சவால் விட்டு வந்தனர். இப்படி இரு தரப்பு ரசிகர்களும் வார்த்தைப் போரில் மோதிக் கொண்டிருந்த நிலையில், படத்தின் முதல் வார வசூல் ரூ. 400 கோடி என்று செய்திகளில் வெளியாகியுள்ளன. விஜய்க்கு மற்ற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக, கேரளாவில் பெரும்பாலான விஜய் ரசிகர்கள் இருக்கும் காரணத்தினாலேயே அங்கு வசூலும் சக்கை போடு போட்டது.

அப்படி பார்த்தால் இந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 45 கோடி வரை வசூளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளியது. ஆனால், ரஜினி ரசிகர்கள் ‘ஜெயிலர் படம் ஒட்டுமொத்தமாக ரூ. 600 கோடி வசூல் செய்துள்ளது, இதை லியோ நெருங்குகிறதா என்று பார்ப்போம்’ என்று மீண்டும் சவால் விட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில், ஏழாவது நாளான நேற்று திரையரங்குகளில் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருந்துள்ளது.

ஆயுத பூஜையின் தொடர் விடுமுறை நாட்கள் முடிந்தது தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், அண்டை நாடான இலங்கையிலும் வசூல் அப்படியே குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. வார நாட்களில் மொத்தமாக படம் ரூ. 4 கோடி வரை மட்டுமே வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி வசூலில் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் லியோ, ஜெயிலர் வசூலை முறியடிக்குமா என்ற சந்தேகமும் உள்ளது. காத்திருந்து பார்த்தால்தான் தெரியும்

அந்த வரிசையில் இன்று தமிழ் சினிமாவில் டாப் ஒன் இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படமும் இடம் பிடித்துள்ளது. இப்படி பல வெற்றிப்பட இயக்குனர்கள் விஜய்யை வைத்து எடுக்கும் படத்தின் படு தோல்விக்கு முக்கிய காரணம் விஜய்க்கு மிருக தோஷம் இருந்து வருவதாலும், அதனால் மிருகங்கள் பறவைகள் பெயரில் விஜய் நடிக்கும் படங்கள் தோல்வியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் லியோ படம் வெளியாவதற்கு முன்பே இந்த படம் மிக பெரிய வெற்றியை பெரும் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைக்கும் என விஜய் ரசிகர்கள் கம்பிக்கு சுத்தி வந்த நிலையில், ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், லியோ நிச்சயம் தோல்வியை சந்திக்கும், விஜய்க்கு மிருகதோஷம் உள்ளது, அதனால் மிருகத்தின் பெயரில் வெளியாக இருக்கும் லியோ படம் தோல்வியை சந்திக்கும் என ஜோதிடத்தின் நம்பிக்கை உள்ளவர்கள் தெரிவித்து வந்தது தற்பொழுது நிரூபணமாகியுள்ளதால், இனி வரும் காலங்களில் விஜய் தன்னுடைய படத்தின் பெயரில் கவனம் செலுத்த வேண்டும் என பலரும் அறிவுரை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.லியோவில் விஜய் தவிர சஞ்சய் தத், த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் சர்ஜா ஆகியோரும் நடித்துள்ளனர். தத் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். கடந்தகால வன்முறை வாழ்க்கையைக் கையாளும் போது தனது குடும்பத்தைக் காப்பாற்ற போராடும் ஒரு எளிய மனிதனைச் சுற்றி படம் சுழல்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்