Thursday, June 13, 2024 3:49 am

போடுறா வெடிய டபுள் மடங்கு ஆக்‌ஷன் ! தெறிக்க விட போகும் அஜித் ! மரண மாஸ் ‘விடாமுயற்சி ’ அப்டேட் இதோ !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமார் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களுக்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர், விடமுயற்சிக்கு இசையமைக்கிறார். இசையமைப்பாளர் தனது விளையாட்டின் உச்சத்தில் இருக்கிறார், மேலும் அவர் 2023 இன் இரண்டு பெரிய படங்களான ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் ஷாருக்கானின் ஜவான் ஆகியவற்றின் ஒரு பகுதியாக இருந்தார். இதற்கிடையில், விடமுயற்சி படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

துணிவு படத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அஜித். அவரது 62ஆவது படமாக இது உருவாகிறது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்தப் படத்திலிருந்து அவர் விலகிவிட அடுத்ததாக மகிழ் திருமேனி உள்ளே வந்தார். மகிழ் திருமேனியும் அட்டகாசமான இயக்குநர் என்பதால் துணிவு படம் போலவே விடாமுயற்சியும் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ஏகே ரசிகர்கள்.

பைக் டூர்: படம் குறித்த அப்டேட் கடைசியாக மே 1ஆம் தேதி வெளியானது. அதோடு சரி அதற்கு பிறகு அஜித் டூர் செல்லும் அப்டேட்டுகள்தான் வெளியாkina. இதனால் வலிமை பட அப்டேட்டுக்கு எப்படி காத்திருந்தனரோ ரசிகர்கள் அதேபோல் காத்திருக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் அஜித்தோ பைக்கை எடுத்துக்கொண்டு உலக நாடுகளில் ஜாலியாக சுற்ற ஆரம்பித்தார்.

விடாமுயற்சி ஷூட்டிங்: இதனையடுத்து லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதன் காரணமாக ஷூட்டிங் தள்ளிப்போயிருப்பதகா கூறப்பட்டது. மேலும் மகிழ் திருமேனியும் திரைக்கதையை செதுக்கிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. அந்த கேப்பை பயன்படுத்தி வளைகுடா நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் செய்தார்.

ஷூட்டிங் ஆரம்பித்தது: இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. அஜர்பைஜான் நாட்டில் நடக்கும் ஷூட்டிங்கில் அஜித், த்ரிஷா, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்துவிட்டு துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் ஷூட்டிங் நடத்தவும் மகிழ் திருமேனி திட்டமிட்டிருக்கிறாராம்.

மிலன் மரணம்: சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த படக்குழுவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் அவருக்கு பதிலாக அவரது மகன் கலை இயக்கத்தை கவனிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

படம் தொடங்குவதற்கு ஏற்கனவே தாமதமாகிவிட்டதால் எந்தக் காரணத்தை கொண்டும் ஷூட்டிங்கை பாதியில் நிறுத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்துக்கு அஜித் வழியாக புதிய சிக்கல் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அஜர்பைஜான் நாட்டின் க்ளைமேட் அஜித் உடல்நிலைக்கு ஒத்துவரவில்லை என்றும் அதன் காரணமாக தினமும் ஷூட்டிங்கிற்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறார். இதனால் ஒருநாளுக்கான ஷூட்டிங் முடிப்பதற்கே தாமதமாவதாக கூறப்படுகிறது.

இதில் அஜித்திற்கு பிடித்த படங்கள் என்றால் அருண்விஜய் நடித்த தடம் மற்றும் தடையறத் தாக்க திரைப்படம் தான். இப்படங்களில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இல்லாத போதும் இரு படங்களும் வேற லெவல் ஹிட் எனலாம். ஆனால் அஜித்தின் படங்கள் என்றாலே ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளுக்கு குறைவே இருக்காது. அந்த வகையில் மகிழ்திருமேனி அஜித்திடம் சொன்ன முழு கதையில் ஆக்ஷன் காட்சிகள் கம்மியாக உள்ளதாக அஜித் தெரிவித்தாராம்.

இதனிடையே துணிவு படம் போல் படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை அக்ஷன் காட்சிகள் இருப்பது போல, படத்தின் கதையை மெருகேற்றுங்கள் என அஜித் மகிழ்திருமேனியிடம் கண்டிஷனுடன் தெரிவித்துள்ளாராம். அஜித்தின் இந்த கண்டிஷனுக்கு சம்மதம் தெரிவித்த மகிழ் திருமேனி, தற்போது இப்படத்தின் கதையை அதிக ஆக்ஷன் கலந்து மெருகேற்றி வருகிறாராம். இதன் காரணமாகத்தான் விடாமுயற்சி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது .

அஜித் குமாரின் விடமுயற்சி படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார். இரண்டு நடிகர்களும் ஏற்கனவே தமிழ் சினிமாவில் மிகவும் பிரியமான திரை ஜோடிகளில் இடம்பிடித்துள்ளனர். அஜீத் குமாரும், த்ரிஷாவும் விடமுயற்சிக்கு முன்பே பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். என்னை அறிந்தால், மங்காத்தா, ஜி மற்றும் கிரீடம் ஆகிய சில படங்களில் இரு நட்சத்திரங்களும் இணைந்து திரை ஜோடியாக சிறந்து விளங்கினர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்