Saturday, June 15, 2024 8:16 pm

நோ சாங்ஸ், ஒன்லி ஆக்ஷன், இறங்கி அடிக்கும் அஜித் ! விடாமுயற்சி படத்தை பற்றி வெளியான சரவெடி அப்டேட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குனர் மகிழ் திருமேனியுடன் அஜித் குமார் நடித்துள்ள ‘விடா முயற்சி’ திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போது, ஆக்‌ஷன் த்ரில்லரான இப்படத்தில் ஒரு புதிய நடிகர் சேர்க்கப்படுவது போல் தெரிகிறது. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரெஜினா கசாண்ட்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர்கள் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை.

நடிகர் அஜித் குமாரின் 62 வது திரைப்படமான (விடாமுயற்சி) நீண்ட நாட்களாக இழுப்பரியில் கடந்து வந்த நிலையில் அண்மையில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது…

மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் எடுத்து வருகிறது படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது . அஜர்பைஜான் நாட்டில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது அடுத்து அபுதாபி, துபாய் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக ரெஜினா மற்றும் த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே இந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வந்த மிலன்..

மாரடைப்பு காரணமாக மரணமடைந்தது பலரையும் சோகத்துக்கு உள்ளாகியது குறிப்பாக விடாமுயற்சி படக்குழுவிற்கு இது பெரும் நஷ்டம் ஆகும்.. மிலனின் இறப்பை ஒட்டி விடாமுயற்சி பட சூட்டிங் கொஞ்சம் நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு சென்று கொண்டிருக்கிறது.இந்த நிலையில் கலை இயக்குனர் மிலனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் விடாமுயற்சி படக்குழு மிலனின் மனைவி மரியா மிலனை கலை இயக்குனராக பணியாற்ற வைக்க உள்ளதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன.. இது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் தெரியவில்லை ஆனால் சினிமா வட்டாரங்களில் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அங்குதான் படமாக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், படத்தை ஹாலிவுட் தரத்தில் உருவாக்குவதற்கான முயர்சியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனராம்.

அசர்பைஜானில் நடைபெற்று வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா மற்றும் பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.அங்குள்ள ரசிகர்கள் அஜித்தை நேரில் சந்தித்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிறது.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் நடிகர் அஜித்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி அஜித்தை வரைந்து அதை அவருக்கு பரிசாகவும் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.60 நாள்கள் படத்தின் படப்பிடிப்பை அஜர்பைஜானில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். விரைவில் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ அந்த புகைப்படம்..

இந்நிலையில் தற்போதுவிடாமுயற்சி படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது, ஆம் அதன்படி இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் பாடல்களை எல்லாம் தவிர்த்துவிட்டார்களாம்.மேலும் படக்குழு இப்படத்தின் பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்த உள்ளதாகவும் தற்போது கூறப்படுகிறது.லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அஜித் குமார் ஒரு படம் செய்யவிருந்தார். இருப்பினும், விக்னேஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையேயான ஆக்கப்பூர்வமான கருத்து வேறுபாடுகளால் படம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பிறகு, இயக்குனர் மகிழ் திருமேனியை வைத்து படம் பண்ண ஒப்பந்தம் செய்யப்பட்டார். சஞ்சய் தத் மற்றும் ஆரவ் ஆகியோர் ‘விடா முயர்ச்சி’ நடிகர்களின் ஒரு பகுதியாக உள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘விடா முயற்சி’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். படக்குழுவில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் எடிட்டர் என்.பி.ஸ்ரீகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்