Monday, April 29, 2024 5:04 am

ப்பா !தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்க போகும் அஜித்தின் விடாமுயற்சி ! இது ஹாலிவுட் லெவல் ! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமாரை மையமாக வைத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு பல தடைகளுக்குப் பிறகு அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடிகர்கள் மற்றும் குழுவினருடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது அந்த நட்சத்திர பட்டாளத்தில் பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளார் என்பது தான் ஹாட் செய்தி.விடாமுயற்சி படத்தில் த்ரிஷா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என்பதை நாங்கள் ஏற்கனவே உங்களுக்குத் தெரிவித்தோம். சமீபத்திய ஆதாரங்களின்படி, படத்தின் குழும நடிகர்களில் பிரியா பவானி ஷங்கர் சமீபத்திய சேர்க்கை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்கு நாம் காத்திருக்க வேண்டும். தற்போது விடாமுயற்சி படத்தில் மூன்று முன்னணி கதாநாயகிகள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முன்னணி நடிகர்கள் படங்கள் ரிலீஸுக்கு முன்பு வரை இதுவரை இந்திய சினிமாவே பார்த்திராத படமாக வரப்போகுது ஹைனா வருது, அனகொண்டா வருது என உருட்டி விட்டு கடைசியில் பிம்பிளிக்கா பிளாப்பி என தியேட்டருக்கு வரும் ரசிகர்களை ஏமாற்றி வருகின்றனர்.

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், சக்க போடு போட்டன இந்நிலையில், அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி ஆரம்பமாகமே ஆறு மாசம் ஆன நிலையில், அஜர்பைஜானிலேயே மொத்த படத்தையும் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கி வருவதாக உருட்டி வருகின்றனர்.

காஷ்மீர், அஜர்பைஜான் என ஷூட்டிங்கிற்கு போவதும் ஏகப்பட்ட பில்டப்புகளும் கொடுப்பதுமாக இருந்து விட்டு கடைசியில் படம் வரும் போது அதற்கான அவுட்புட் இல்லாமல் போவதால் ரசிகர்கள் தொடர்ந்து முதல் நாளே அதிக பணம் கொடுத்து பார்த்து ஏமாந்து போகும் நிலை தொடர்ந்து வருவதால் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

இயக்குநர் மகிழ் திருமேனி தடம் போல அருமையான படத்தை நடிகர் அஜித்துக்கு தாறுமாறாக கொடுத்து மீண்டும் ஒரு கம்பேக்கை கொடுக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பம். ஆனால், ஒட்டுமொத்த படமும் அஜர்பைஜானில் ஷூட் செய்யப்பட்டால் தமிழ் ஆடியன்ஸை கனெக்ட் ஆகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.விடாமுயற்சி ஹாலிவுட் தரத்தில் இருக்கும்: விஸ்வாசம் படத்திற்குப் பின்னர் அஜித்துக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது துணிவு. இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியான துணிவு, மிகப் பெரிய வெற்றிப் பெற்றதோடு, 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனால் அஜித்தின் ஏகே 62 படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதன்படி லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிறது ஏகே 62.

விடாமுயற்சி என்ற டைட்டிலில் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. ஆனால், எதிர்பாராதவிதமாக விடாமுயற்சி படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் சோகத்தில் இருந்த விடாமுயற்சி படக்குழு, தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. மேலும் மிலன் உயிரிழந்ததால், தற்போது அவரது மனைவியை ஆர்ட் டைரக்டராக பணியாற்றவுள்ளாராம்.

அஜர்பைஜான் நாட்டில் உருவாகும் விடாமுயற்சி, முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்றும், அதனால் விடாமுயற்சி ஷூட்டிங் முழுவதும் அஜர்பைஜான் நாட்டில் நடைபெறும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.அந்த வகையில் தற்போது அஜித்துடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகியுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், அஜித் உடல் எடை குறைந்து மிகவும் மெலிந்து போய்விட்டாரே என கூறி வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்..

விடாமுயற்சியை மகிழ் திருமேனி எழுதி இயக்கியுள்ளார் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோரும் படத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் இந்த திட்டத்திற்கு அனிருத்தின் இசையும், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், சுப்ரீம் சுந்தரின் சண்டைக்காட்சிகளும் உள்ளன. இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்