Sunday, April 28, 2024 9:02 pm

சென்னையின் முக்கியமான ரோகிணி தியேட்டரில் லியோ படம் ரிலீஸ் இல்லை !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மாஸ்டருக்குப் பிறகு லோகேஷ் உடனான விஜய்யின் இரண்டாவது கூட்டணியை லியோ குறிக்கிறது. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் ஆதரவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இதில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற 19-ஆம் தேதி லியோ திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. லியோ படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களுமே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. படம் ரிலீஸ் ஆக மூன்று நாட்களே உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது உண்டு.

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகிறது என்றால் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது. அந்த அளவுக்கு கொண்டாட்டங்கள் இருக்கும். முன்னதாக விஜயின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் ஒரே நேரத்தில் ரிலீசானது.விஜய் படம் ரிலீஸ் ஆகப்போகிறது என்றால் அஜித் ரசிகர்களும், அஜித் படம் ரிலீஸ் ஆகப்போகிறது என்றால் விஜய் ரசிகர்களும் மாறி மாறி நெகட்டிவ் கமெண்ட்களை கூறுவது உண்டு. இந்நிலையில் விஜய் நடித்த லியோ படம் வெற்றி பெற வேண்டும் என அஜித் ரசிகர்கள் அடித்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் இப்படி அன்போடு இருந்தால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையின் முக்கியமான ரோகிணி தியேட்டர், கோயம்பேடுஇன்னமும் பஞ்சாயத்து, பேச்சு வார்த்தை தொடர்கிறது. தயாரிப்பு தரப்பு, தியேட்டர் ஷேர் பங்கீடு சிக்கல்..ஆனாலும் விரைவில் முடிவு எட்டப்பட்டு, நாளை 9 மணிக்கு படம் ரிலீஸ் ஆகும் என தகவல்சென்னை ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படம் திரையிடப்படாது..!லியோ டீசர் வெளியிடப்பட்டபோது திரையரங்கை சூறையாடப்பட்ட நிலையில் லியோ படம் திரையிடப்படாது என ரோகிணி
திரையரங்க நிர்வாகம் அறிவிப்பு

- Advertisement -

சமீபத்திய கதைகள்