Monday, April 29, 2024 8:21 am

எப்பவும் நான் தான் “ஓப்பனிங் கிங் ” என நிருபித்து காட்டிய அஜித் ! திணறும் லியோ ! அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாலை காட்சிகளுக்கு (காலை 4 மற்றும் 7 மணி காட்சிகள்) அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கை அக்டோபர் 17-ம் தேதி விசாரித்த நீதிபதி அனிதா சம்பத், காலை 7 மணி காட்சிகள் குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரிய முடிவை தமிழக அரசுக்கு விட்டுவிட்டார். தயாரிப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை அரசு அதிகாரிகளுடன் பல விவாதங்களை நடத்திய பிறகு, அரசாங்கம் அதன் இறுதி உத்தரவை இன்று அக்டோபர் 18 ஆம் தேதி நிறைவேற்றியது.’லியோ’ ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர். இப்படம் தமிழகத்தில் காலை 9 மணிக்கு வெளியாகிறது என்றாலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் முன்கூட்டியே திரையிடப்படும்.

தமிழ் சினிமாவில் ஓப்பனிங் கிங் என்றால் அது நடிகர் அஜித்குமார் தான். இது தற்போது தொடர்கிறது என்பதுதான் இங்கே விஷயம்.நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

விண்ணை தொட்ட எதிர்பார்ப்பு என்று கூறலாம். அந்த அளவுக்கு படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதை பார்க்க முடிகிறது.இந்நிலையில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் செட் செய்த ரெக்கார்டை உடைக்க முடியாமல் திணறி வருகிறது லியோ திரைப்படம்.

வலிமை திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 957 திரைகளில் வெளியானது. ஆனால், லியோ திரைப்படம் தற்போது வரை 850 திரையரங்குகள் மட்டுமே பெற்று இருக்கிறது.

லியோ திரைப்படம் நாளை (அக்.19) வெளியாக உள்ள நிலையில் இன்னும் 20 திரைகள் கூடுதலாக கிடைக்கலாம் எனவும், ஆனால் 900 திரைகள் என்ற இலக்கை கூட லியோ திரைப்படம் எட்டாது என கணித்திருக்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் ஜோதிடர்கள்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் மோதிய போதும் கூட நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்தன. முதல் நாள் வசூலும் விஸ்வாசம் திரைப்படத்திற்கு தான் அதிகமாக கிடைத்தது.

நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் படத்துடன் மோதி இப்போதும் நான் தான் ஓப்பனிங் கிங் என்பதை நிரூபித்தார் நடிகர் அஜித்குமார்.

தற்போது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் போதும். நான் தான் ஓப்பனிங் கிங் என்பதை ஆணித்தரமாக அடித்து கூறி இருக்கிறார்.

லியோ திரைப்படத்திற்கான திரைகளின் எண்ணிக்கை கூடுமா..? வலிமை ரெக்கார்டை தகர்க்குமா லியோ..? பொறுத்திருந்து பார்க்கலாம்.’லியோ’ படத்தில் தளபதி விஜய், சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், மிஷ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள ‘லியோ’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்