Sunday, April 28, 2024 10:47 am

லியோ படத்துக்காக ரசிகர்கள் போலீசாரிடம் அடிவாங்கினாலும் பரவாயில்லை வியாபார முறையை மாற்றிய விஜய் ! ரசிகர்கள் அதிர்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “லியோ” திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த ”லியோ” படத்தின் ரசிகர்கள் காட்சியை அதிகாலை 4 மணிக்குத் திரையிட அனுமதிக்க வேண்டும் எனப் பட நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது . அதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக விசாரணைக்கு வர உள்ளது.

இந்த பட நிறுவனத்தின் வழக்கறிஞர், அதிகாலை 4 மணிக்குத் திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். மேலும், வரும் அக் . 20ம் தேதி முதல் அக் . 24ம் தேதி வரை அரசால் அனுமதிக்கப்பட்ட சிறப்புக் காட்சிகளை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

அதேசமயம், தமிழக அரசின் வழக்கறிஞர், அதிகாலை 4 மணிக்குத் திரையிட அனுமதிக்கப்படுவதால், பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் என்று தெரிவித்தார். மேலும், 7 மணிக்குத் திரையிட அனுமதிப்பது சரியான தீர்வாகும் என்று வாதிட்டார்.

இந்த வழக்கு விசாரணை முடிவடையாததால், நேற்று உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆகவே, இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. மேலும், இந்த வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து, லியோ படத்தின் ரசிகர்கள் காட்சியை அதிகாலை 4 மணிக்குத் திரையிட அனுமதிக்கப்படுமா ? இல்லையா ? என்பது தெரியவரும்.இந்நிலையில் வழக்கமாக விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் எம்ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் வியாபாரம் நடக்கும்.

ஆனால், முதன்முறையாக இந்தப்படத்தின் வியாபாரம் டிஸ்டிரிபியூசன் அடிப்படையில் நடந்திருக்கிறது.

மினிமம் கியாரண்டியில் படம் விற்பனை செய்தால் அந்தக் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வசூலாகும் தொகையில் தயாரிப்பாளருக்குப் பாதிதான் வரும் மீதி விநியோகஸ்தருக்குப் போகும்.

டிஸ்டிரிபியூசன் என்றால் வசூலாகும் மொத்தத் தொகையும் தயாரிப்பாளருக்குக் கிடைக்கும்.அதில், ஐந்து அல்லது மூன்று விழுக்காடு தரகுத் தொகை விநியோகஸ்தருக்குக் கிடைக்கும்.

அதனால், இந்தப்படத்தின் மொத்த வசூலும் தமக்கே வரவேண்டும் என முடிவு செய்த லியோ படக்குழு எல்லா விநியோகப் பகுதிகளிலும் மினிமம் கியாரண்டி என்று இருந்ததை, டிஸ்டிரிபியூசன் வகைக்கு மாற்றிவிட்டார்களாம்.

அதன்பின், திரையரங்குகளோடு ஒப்பந்தம் போடப்போனால் அங்கும், எங்களுக்கு 75 விழுக்காடு 80 விழுக்காடு பங்கு வேண்டும் என்று கேட்கிறார்களாம். அதனால் திரையரங்குக்காரர்கள் அதிர்ச்சி அடைந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.

சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதி வியாபாரத்தில் பல்லடுக்கு திரையரங்குகள் மற்றும் தனித்திரையரங்குகள் ஆகியனவற்றிற்கு தனித்தனியாக வியாபாரம் நடந்திருக்கிறது.

பல்லடுக்குத் திரையரங்குகளில், எல்லாப்படங்களுக்குமே ஐம்பது விழுக்காடுதான் பங்கு தருவார்கள். அவர்களிடமும் எங்களுக்கு அறுபது விழுக்காடு தரவேண்டும் என்று கேட்கிறதாம் லியோ குழு.

இதனால், பிவிஆர் உள்ளிட்ட நிறுவனங்களும் ஒப்பந்தம் போடாமல் இருக்கின்றனவாம்.இந்தக் காரணத்தால்தான் இன்னமும் முன்பதிவு தொடங்கவில்லை.

லியோ படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறதென்பதால் இதுவரை இருந்த வியாபார முறைகளை மாற்றி எல்லாப்பணமும் எங்களுக்கே என்று சொல்கிறது படக்குழு.

இவையெல்லாம் படம் நன்றாக இருந்தால் மட்டுமே நடக்கும். இல்லையெனில் எல்லாமே தலைகீழ்.இது ஒருபுறமிருக்க, ’லியோ’ படத்தின் முதல் காட்சி 4 மணியா அல்லது 7 மணியா என்று குழப்பம் எழுந்த நிலையில் காலை 9 மணிக்கு முதல் காட்சியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டு தெளிப்படுத்தியிருந்தது. மேலும், லியோ திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படம் காண வரும் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது எனவும், கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில், லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், 19.10.2023 அன்று அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு திரையிட அனுமதி கோரியும், 19.10.2023 முதல் 24.10.2023 வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகளை காலை 7 மணி முதல் திரையிட அனுமதி கோரியும் வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிபதி அனிதா சுமந்த் இந்த வழக்கை நாளை விசாரிக்கவுள்ளார்.

ஏற்கனவே விஜய் படத்தின் டீசர் வெளியான பொழுது ரோகிணி தியேட்டரை அடித்து நொறுக்கி தும்சம் செய்தனர் விஜய் ரசிகர்கள். பொதுவாகவே விஜய் படம் சிறப்பு காட்சி ரிலீஸ் செய்யப்படும் போதெல்லாம் பல பிரச்சனைகள் ஏற்படும். பலர் அடி தடி செய்து போக்குவரத்து நெரிசல்களையும் உருவாக்குகின்றனர். கடந்த முறை படத்தின் ஆடியோ லாஞ்சிங் போது ஏற்பட்ட பிரச்சனைகள் போலீசார் ரசிகர்களை லத்தியில் அடித்து அமைதி படுத்தினர். அதனாலேயே இந்த முறை ஆடியோ லான்ச் வைக்கவில்லை. இருப்பினும் சிறப்புக் காட்சி வைக்க தொடர்ந்து வழக்குகளை போட்டு வருகின்றனர். இதனால் விஜய்க்கு ரசிகர்கள் மீது அக்கறை இல்லையா என்று பலர் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

நிலைமை இப்படியிருக்க, மிக சுமாரான ஒலி-ஒளி தரம் கொண்ட திரையரங்குகளில் கூட ரூ.1200 முதல் ரூ.1500 வரை டிக்கெட் விற்கப்படுவதாகவும், பெரிய திரையரங்குகளில் டிக்கெட் விலை ரூ.2000 முதல் ரூ.4000 வரை போகலாம் என்றும் வேதனையுடன் கூறுகின்றனர். அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் திரையரங்குகளை தமிழக அரசு கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்