Sunday, April 28, 2024 10:37 am

வெங்கட்பிரபு மற்றும் சினேகா நடித்த ஷாட் பூட் த்ரீ படத்தின் முழு விமர்சனம் இதோ !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வெங்கட்பிரபு அருணாசலம் வைத்தியநாதன் ஷாட் பூட் 3 என்ற குழந்தைகளுக்கான திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தில் குழந்தை கலைஞர்கள் ஜி கைலாஷ் ஹீட், ப்ரணிதி பிரவீன் மற்றும் பூவையார் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை சினேகா, யோகி பாபு ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்போது, தயாரிப்பாளர்கள் படத்தின் குழந்தைகளைக் கொண்ட தி கேங் பாடல் என்ற இசைப் பாடலை வெளியிட்டுள்ளனர். படத்தின் இசை ராஜேஷ் வைத்யா. இந்தப் பாடலை ப்ரணிதி பிரவீன் பாட, பூவையார் ராப் பாடினார்

அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கி தயாரித்துள்ள படம் ஷாட் பூட் த்ரீ.பல்வேறு உலக நாடுகளில் நடை பெற்று வரும் திரைப்பட விழாக்களில் சிறந்த குழந்தைகள் திரைப்படமாக ஷாட் பூட் த்ரீ படம் திரையிடப் படுகிறது.இன்னும் ஒரிரு நாட்களில் நம் இந்திய ரசிகர்களுக்காக திரையரங்கிற்க்கு வரவுள்ளது இப்படம்.

வெங்கட் பிரபு, சினேகா, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்யும் சியாமளா (சினேகா ) சாமிநாதன் (வெங்கட் பிரபு ) தம்பதிகளுக்கு ஒரே மகன் சிறுவன் கைலாஷ் (கைலாஷ் ஹிட் ) இவன் ஆசையாய் ஒரு நாய் வாங்கி செல்லப் பிராணியாக வளர்க்கிறான் நாய் ஒரு நாள் காணாமல் போய் விடுகிறது.

நண்பர்களுடன் சேர்ந்து நாயை தேடுகிறான். நாயை கொன்று புதைக்க திட்டம் போடுகிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள். நாய் மீட்கப்பட்டதா? என்பதை சிறுவர்களின் பயணம் வழியே சொல்லி இருக்கிறார் டைரக்டர். ஒரு சிறிய ஒன் லைன், இதன் வழியே திரைக்கதை என ஒரு நல்ல குழந்தைகள் பொழுது போக்கு படமாக தந்துளார் வைத்திய நாதன். இது குழந்தைகள் படமாக இருந்தாலும் பெற்றோர்களுக்கான பாடமாகவும் வந்துள்ளது ஷாட் பூட் த்ரீ. கார்ப்பரேட் நெருக்கடிகளால் ஒரே குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் உயர் நடுத்தர பெற்றோர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை சொல்கிறது இப்படம்.

சினேகாவும் வெங்கட் பிரபு வும், ஒரு நடுத்தர வயது பெற்றோர்களாக வாழ்ந்து காட்டிஉள்ளார்கள்.கைலாஷ் ஹிட், பிரணித்தி, வேதாந்த் இந்த மூன்று சிறுவர்களும் சம கால சிறுவர்களை கண் முன் காட்டி விடுகிறார்கள். சிறுமி பிரணித்தி நடிப்பில் மட்டும் கொஞ்சம் முதிர்ச்சி தெரிகிறது. யோகிபாபு இருக்கிறார் ஆனால் அவரிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நகைசுவைதான் இல்லை.

வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் பின்னணி இசை சுமார் ரகம் தான் மிகவும் சராசரி இசையாக நம்மை கடந்து செல்கிறது. விலங்குகள், சிறுவர்கள் என பல விஷயங்கள் படத்தில் பேசப்பட்டாலும், ஷாட் பூட் த்ரீ இன்றைய பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் செய்யவேண்டிய விஷயத்தையும் சொல்லி செல்கிறது.கை நிறைய சம்பளம், கேட்கும் பொருள்களை வாங்கி தருவது, பெரிய வீடு இந்த அனைத்தையும் தாண்டி குழந்தைகளிடம் பேச நேரம் ஒதுக்குங்கள் என்கிறது ஷாட் பூட் த்ரீ.

“அருணாச்சலம் என்பது எனது உண்மையான பெயர், ஆனால் நான் திரைப்படங்களில் நுழைந்தவுடன் அதைச் சுருக்கினேன். நான் திருவண்ணாமலையில் பிறந்து ரமண மகரிஷியின் பக்தன், எனவே எனது அசல் பெயருக்கு மாற முடிவு செய்தேன்.

எழுதி இயக்குவது மட்டுமின்றி, அருணாச்சலம் தனது ஹோம் பேனரான யுனிவர்ஸ் கிரியேஷன்ஸின் கீழ் படத்தைத் தயாரித்தார். அச்சமுண்டு போன்ற படங்களால் மிகவும் பிரபலமானவர்! அச்சமுண்டு! (2009) மற்றும் அர்ஜுன் சர்ஜா நடித்த நிபுணன் (2017).ஷாட் பூட் 3 இன் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு மற்றும் எடிட்டர் பரத் விக்ரமன் ஆகியோர் உள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்