Monday, April 29, 2024 1:46 pm

சந்திரமுகி-2 படத்தில் லாரன்ஸுக்குள் பாலகிருஷ்ணா ஆவி !’சந்திரமுகி-2′ படத்தை பங்கம் செய்த ப்ளூ சட்டை

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ரஜினிகாந்த், ஜோதிகா மற்றும் நயன்தாரா நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படம் காலத்தின் சோதனையாக நிற்கும் ஒரு படம். பத்தாண்டுகளுக்குப் பிறகு, அசல் படத்தை இயக்கிய இயக்குனர் பி வாசு, அதன் தொடர்ச்சியைக் கொண்டு வந்தார். ‘சந்திரமுகி 2’ அனைவரையும் கவர்ந்ததா?மோகன்லால் மற்றும் ஷோபனின் ‘மணிசித்திரத்தாழ்’ படத்தின் ரீமேக்காக உருவான ‘சந்திரமுகி 2’ அதன் முன்பகுதியிலிருந்து கதையை வாங்குகிறது. ராதிகா சரத்குமாரின் மகள் கணவருடன் ஓடிப்போய் குடும்பத்தினரின் கோபத்தை சம்பாதித்தார். அவளுடையது கலப்பு திருமணம் என்பதால், அவள் தரப்பிலிருந்து எந்த ஒப்புதலும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, ஒரு விபத்தின் காரணமாக, அவரது மகளும் மருமகனும் இரண்டு குழந்தைகளை விட்டு இறந்தனர். பாண்டியன் (ராகவா லாரன்ஸ்) அவர்களின் பராமரிப்பாளர்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சந்திரமுகி 2 படத்துக்கு தன்னுடைய விமர்சனத்தை கொடுத்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் விமர்சனத்தில், “சந்திரமுகி படத்தின் முதல் பாக கதையை பட்டி டிங்கரிங் பார்த்து நம் தலையில் கட்டியிருக்கிறார்கள். அந்த சாயல் தெரியக்கூடாது என்று வேலை செய்திருக்கிறார்கள். ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்னு சொல்லி படம் பண்ணியிருக்கிறார்கள். படத்தின் குவாலிட்டியை இம்ப்ரூவ் செய்யுற மாதிரி ஒன்னுமே இல்லை. காலி செய்யுற மாதிரிதான் இருக்கு.ஹீரோவே பிரச்னை: இந்தப் படத்தில் பிரச்னையே ஹீரோதான். லாரன்ஸிடமிருந்து ரஜினியின் சாயலை எடுப்பதற்கே படாத பாடு பட்டதாக பி.வாசு கூறியிருந்தார். ரஜினியின் சாயலை எடுத்துவிட்டு பாலகிருஷ்ணாவின் ஆவியை லாரன்ஸுக்குள் புகுத்தியிருக்கிறார் இயக்குநர். ஹீரோவின் அறிமுக சண்டை காட்சியில் பாலகிருஷ்ணாவின் மெத்தடில் இறங்கிவிட்டார். தியேட்டரில் இருந்தவர்கள் அதை பார்த்துவிட்டு கைத்தட்டி சிரித்துவிட்டார்கள். அந்த மாதிரி ஒரு காமெடி. கலாய்க்கக்கூட இந்தப் படம் தகுதி இல்லை.

திசை பக்கமே போகாதீங்க: வேட்டையன் கேரக்டரை வேட்டையனாகவும், செங்கோட்டையனாகவும் பிரித்து குழப்பி வைத்திருக்கிறார்கள். சந்திரமுகி 1 வெற்றிக்கு முக்கிய காரணம் ஜோதிகாவின் நடிப்பு. ஆனால் இதில் கங்கனா ரணாவத் என்ற பாட்டியை கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். பின்னணி இசையும் சரி பாடலும் சரி சுத்தமாக நன்றாக இல்லை. இந்தப் படத்தில் தெற்கு திசை பக்கம் போயிடாதீங்கனு சொல்லிட்டே இருப்பாங்க. நாங்க என்ன சொல்றோம்னாஇந்தப் படம் ஓடும் தியேட்டர் இருக்கும் திசை பக்கமே நீங்க போயிடாதீங்க” என குறிப்பிட்டிருக்கிறார்.

‘சந்திரமுகி 2’: பி வாசு இயக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் ‘தி’ சந்திரமுகியாக கங்கனா நடிக்க உள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திகில் தொடர்ச்சி சந்திரமுகி கதாபாத்திரத்தை ஆழமாக ஆராயும், திறமையான நடிகை ஒரு அழகான நடனக் கலைஞராக சித்தரிக்கிறார், அவர் பின்னர் பேயாக மாறினார். கங்கனா ரனாவத் மீண்டும் தமிழ் ரசிகர்களை வசீகரிக்க தயாராகிவிட்டார், மேலும் அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்