Monday, April 29, 2024 3:59 pm

அஜித் மட்டும் மீண்டும் வந்தால் ரஜினி VS விஜய் பஞ்சாயத்து எல்லாம் இருக்காது ! இயக்குநர் பேரரசு ஒரே போடு !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித்தின் விடா முயற்சி படக்குழு அபுதாபிக்கு சென்று படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக தெரிகிறது. மகிழ் திருமேனியுடன் அஜித்தின் முதல் கூட்டணியைக் குறிக்கும் இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க வாய்ப்பு உள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது. தொழில்நுட்பக் குழுவினர் ஏற்கனவே வளைகுடாவிற்கு சென்றுவிட்ட நிலையில், செட்டுக்கான தயாரிப்பில் மும்முரமாக உள்ள நிலையில், அடுத்த வாரம் நட்சத்திர நடிகர்கள் இணைய உள்ளனர். குழு ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் பகுதிகளை பதப்படுத்துவது போல் தெரிகிறது.

வாரிசு படம் வெளியானதில் இருந்தே ரஜினி – விஜய் ரசிகர்கள் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வந்த. இதற்கு பதலடி கொடுக்கும் வகையில், ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற ஹூக்கும் பாடலில் பட்டத்த பறிக்க நூறு பேரு உள்ளிட்ட அட்டாக் வரிகள் இடம் பெற்றிருந்தது.

இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயிலர் பட ப்ரொமோஷன்களில் சரியான பதில் அடி கொடுத்திருந்தார்.

கொச்சைப்படுத்தக்கூடாது: இந்நிலையில் இயக்குநர் பேரரசு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் விஜய்யை வைத்து திருப்பாச்சி படம் எடுத்தேன் அப்போதே அவர் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் கொடுத்தார். அவர் எப்போதுமே மாணவர்களுக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார். தற்போது அவர், மாணவர்களுக்காக செய்த உதவி அரசியலாக மாற்றிவிட்டார்கள். அவர் மாணவர்களுக்காக உதவி செய்ததை அரசியலாக்கி கொச்சைப்படுத்துகிறார்கள். அவர் இதை திடீரென செய்யவில்லை, எப்போதும் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார்.

கதையில் தலையிடமாட்டார்: விஜய்யை வைத்து நான் படம் எடுத்து இருக்கிறேன், இதுவரையில் அவர் கதையிலும், வசனத்திலும் தலையிட்டது இல்லை. ஆனால், தற்போது அவர் நடிக்கும் படத்தில் அரசியல் வசனங்கள் வருவதற்கு காரணம் இயக்குநர்கள் தான். அவர் வைக்கும் வசனத்தை அவர் ஏற்றுக்கொண்டு உடன்பட்டு நடிக்கிறார்.சூப்பர் ஸ்டார் பட்டம்: மேலும், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிரச்சனை நடந்து கொண்டு இருக்கிறது. 45 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் ரஜினி, அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான் என்று அடுத்தவர்களுக்கு அந்த பட்டத்தை கொடுக்கலாம் ஆனால், மற்றவர்கள் நான் தான் சூப்பர் ஸ்டார் என்று பட்டத்தை எடுத்துக்கொள்வதில் உடன்பாடு இல்லை.

தலவந்துவிட்டால்: ரஜினி – கமல், அஜித்-விஜய் என்று பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களான அது மாதிரி ரஜினி-விஜய் என்பது பேசுபொருளாகி உள்ளது. இதற்கு காரணம் அஜித் தான், அவருக்கு இப்போது இல்லை 20 வருடத்திற்கு முன்பு இருந்தே பைக் ரேஸ் மீதுதான் ஆர்வம். அவர் பணம் சம்பாதிப்பதற்காகத்தான் சினிமாவிற்கு வந்தேன் என்று பல பேட்டியில் சொல்லி இருக்கிறார். தலவந்துவிட்டால் ரஜினி-விஜய் பஞ்சாயத்து சரியாகி விடும் என்றார்.எச்.வினோத் இயக்கிய பொங்கல் வெளியீட்டுத் திரைப்படமான துணிவுவில் அஜித் கடைசியாகக் காணப்பட்டார், இப்படம் ஒரு வங்கிக் கொள்ளையைச் சுற்றியது மற்றும் நட்சத்திரக் குழுவில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் ஒரு அதிரடி நாடகம் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது.

அஜித் பின்னர் படங்களில் இருந்து ஓய்வு எடுத்து பைக் ஓட்டுவதில் தனது ஆர்வத்தைத் தொடர்ந்தார். இதற்கிடையில், அவரது தந்தை பி.எஸ்.மணியும் இறந்துவிட்டார். இப்போது விடா முயற்சியின் வேலைகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளதால், அஜித் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் மற்றும் படத்தின் புதுப்பிப்புகளை எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்