Saturday, September 23, 2023 11:44 pm

இத பண்ணாத-ன்னு அப்பவே வார்னிங் கொடுத்த கண்டுக்கல ! மாரிமுத்துவிடம் சண்டை போட்ட ஜோதிடர் பரபரப்பு பேட்டி !

spot_img

தொடர்புடைய கதைகள்

பாபி சிம்ஹா நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

தென் திரையுலகில் நன்கு அறியப்பட்ட முகமான பாபி சிம்ஹா, சலார், இந்தியன்...

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட்...

லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 படத்தின் புதிய ட்ரைலர் இதோ !

பிளாக்பஸ்டரின் இரண்டாம் பாகமான 'சந்திரமுகி 2' செப்டம்பர் 28 ஆம் தேதி...

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் ரீலிஸ் தேதியை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ !

அயலான் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரமாண்டமான பொங்கல்/சங்கராந்தி விருந்தாக ஜனவரி...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘எதிர் நீச்சல்’ நிகழ்ச்சிக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது மாரடைப்பால் மரணமடைந்தார். செப்டம்பர் 8ஆம் தேதி காலை 8.30 மணியளவில் டப்பிங் ஸ்டுடியோவில் மயங்கி விழுந்தார். அவர் மறைந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, மாரிமுத்து தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து நெஞ்சுவலி பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையில், பிரசன்னா, ராதிகா சரத்குமார் மற்றும் அருண் விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் இரங்கல் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள ட்விட்டர் அழைத்துச் சென்றனர்.இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கலந்து கொண்ட இவருடைய விவாத நிகழ்ச்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்குமான விவாத நிகழ்ச்சியில் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர் என்று கலந்து கொண்டார் நடிகர் மாரிமுத்து.

அப்பொழுது ஜோதிடர்களுடன் கடுமையான காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார்.இப்படியாக இந்த நிகழ்ச்சியை முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது அவர் மரணமடைந்திருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியில் பேசப்பட்ட விஷயங்கள் உண்மையாக இருக்கிறது என்று இணைய பக்கங்களில் பல்வேறு வீடியோக்கள் பரவி வருகின்றன.

இவருடைய இடுப்புக்கு மேலே பிரச்சனை இருக்கிறது என்ற அப்போதே ஜோதிடர்கள் கூறியிருக்கிறார்கள். அதே போல, ஏற்கனவே மாரிமுத்துவின் இதயத்தில் இரண்டு ஸ்டென்ட் வைத்திருப்பது அவருக்கு தெரியும்.

பிரச்சனை இருந்தும் இல்லை என்று மறுத்த மாரிமுத்து
ஆனாலும், இடுப்புக்கு மேல என்றால் இதயம் தான் இருக்கு. அது, எல்லாம் நல்லாதான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று ஒரு விவாதத்திற்காக தன் கருத்தை விட்டுக்கொடுக்காமல் பேசியிருக்கிறார்.

அவர் அந்த இடத்தில் ஆம் உண்மைதான் என்று ஒப்புக் கொள்ளாமல், விவாதத்தில் நாம் இறங்கி வந்து விடக்கூடாது என்பதால் விடாப்பிடியாக அதெல்லாம் நன்றாக இருக்கிறது என்று பேசி இருக்கிறார் என்றெல்லாம் இணைய பக்கங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.

இது ஒரு பக்கம் இருக்க அந்த விவாத நிகழ்ச்சியில் மாரிமுத்துடன் சண்டையிட்ட ஜோதிடர் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.

மாரிமுத்து ஒரு நல்ல நடிகர். நாங்கள் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். விவாதம் செய்தோம். அது சண்டையாக கூட பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் மரணிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

ஜோதிடர்கள் வழக்கு..
இத்தனைக்கும் 30 ஜோதிடர்கள் ஒன்று கூடி அவர் மீது வழக்கு தொடுக்கலாம் என்று கூறினார்கள். அப்போது நான் தான் வழக்கு தொடுப்பதால் என்ன நடக்கப்போகிறது அதிகபட்சமா அவர்களிடம் மன்னிப்பு கேட்பார். அந்த மன்னிப்பை அவர் அந்த படப்பிடிப்பு தளத்திலேயே கேட்டு விட்டார்.இதற்கு மேல் அவர் மீது வழக்கு கொடுத்து, அதை நாம் நடத்திக் கொண்டு, அவருக்கும் சிரமம் நமக்கும் சிரமம், எதுக்கு இதெல்லாம்.. வேண்டாம்.. என்று பேசி அதனை தீர்த்து வைத்து விட்டேன்.

மாரிமுத்து நடித்த படங்களையோ அல்லது தொலைக்காட்சி நாடகங்களை நான் பார்த்தது கிடையாது. அந்த சண்டைக்கு பிறகு ஒரு இரண்டு முறை நான் அந்த எதிர்நீச்சல் என்ற சீரியலை பார்த்தேன்.

கோபமாகவே இருக்கிறார்..
அந்த சீரியலில் அவர் எந்நேரமும் கோபமாக இருப்பது போன்ற காட்சிகள் தான் இடம் பெற்றிருக்கிறது. சாதாரணமாக அவர் பேசுவதை பார்க்கவே முடியவில்லை. அவர் மிகவும் கஷ்டப்பட்டு கோபமாக பேசுகிறார்.

இயல்பாகவே அவர் கோபப்பட்டு நடித்திருக்கிறார் என்று தான் பார்க்க முடிகிறது. எந்நேரமும் கோபமாக இருப்பது என்பது ஒரு வித மன அழுத்தத்தை உண்டாக்கும். உடலுக்கும் அது கெடுதல்.

இதுதான் அவர் செய்த தவறு. நடிப்பு என்பது இயல்பாக நடித்துவிட வேண்டும் கஷ்டப்பட்டு நடிப்பது என்பது தவறானது. ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் என்றால் பரவாயில்லை.

அந்த நாடகம் முழுக்க அவர் கோபமாகவே இருப்பது போன்ற காட்சிகளையே நம்மால் பார்க்க முடிகிறது. எந்நேரமும் அவர் யாருடனாவது கத்திக்கொண்டு, கோபப்பட்டு கொண்டுதான் இருக்கிறார். இதுவே இவருடைய இந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம்.

இதுதான் மாரிமுத்து செய்த ஒரே தவறு. மற்றபடி எங்களுடன் விவாதத்தில் ஈடுபட்டது இதெல்லாம் நிறைய பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள். மட்டுமில்லாமல் மாரிமுத்து மரணத்திற்கு ஜோதிடர்கள் தான் காரணம் என்பது போன்ற செய்திகளை பரப்புபவர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லோருமே ஒரு நாள் மரணிக்க போகிறோம். நானும் ஒருநாள் மரணிக்கத் தான் போகிறேன். அப்படி இருக்கும் பொழுது மாரிமுத்து மரணத்திற்கு நாங்கள் தான் காரணம் என்றெல்லாம் இணையத்தில் செய்திகளை பரவ விடுவது அபத்தமானது. இதனை யாரும் இப்படி செய்யக்கூடாது என்று பேசியிருக்கிறார் அந்த ஜோதிடர்.
மாரிமுத்துவின் உடல் தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடல் தேனியில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் செய்யப்படும்.’வாலி’, ‘ஜீவா’, ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘ஜெயிலர்’ போன்ற அவரது மறக்கமுடியாத நடிப்புகளில் சில. 2022 முதல், அவர் தமிழ் தொலைக்காட்சி தொடரான ‘எதிர் நீச்சல்’ தொடரின் ஒரு பகுதியாக இருந்தார். மாரிமுத்து யூடியூப்பில் ஒரு பரபரப்பாக இருந்தார் மற்றும் அவரது கருத்துகளுக்காக சமூக ஊடக தளங்களில் டிரெண்டிங்கில் இருந்தார். அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ரீல்கள் சமூக ஊடக தளங்களில் வைரலானது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்