Saturday, September 30, 2023 7:42 pm

மாமனார் விட்ட சாபத்தால் பங்களா மாளிகையில் இருந்தும் நிம்மதி இன்றி தவிக்கும் ஒல்லி நடிகர் !

spot_img

தொடர்புடைய கதைகள்

பாலிவுட்டில் அறிமுகம் ஆகும் லோகேஷ் கனகராஜ் ! லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்

தமிழ் இயக்குனரான லோகேஷ் கனகராஜ், தனது துறையில் ஒரு பெரிய வீரராக...

‘அநீதி’ படத்தில் நடித்ததற்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு காளி வெங்கட் நன்றி தெரிவித்துள்ளார்.

வசந்தபாலன் இயக்கிய 'அநீதி' ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது, மேலும் படம்...

சசிகுமாரின் அடுத்த படமான நவீன் சந்திராவின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

முன்னதாக காவல்துறை உங்கள் நண்பன் படத்தை இயக்கிய ஆர்.டி.எம் இயக்கத்தில் வரவிருக்கும்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது புதிய ஹிந்தி படமான தேரே இஷ்க் மேயை அறிவித்தார். இலகுவான பொழுதுபோக்குகளை வழங்குவதில் பெயர் பெற்ற ஆனந்த் எல் ராய் இந்தப் படத்தை இயக்குகிறார். முன்னதாக, தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய் ஆகியோர் ராஞ்சனா மற்றும் ஆத்ரங்கி ரே படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ஹாட் பியூட்டி கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார் என்பது சமீபத்திய செய்தி. நவம்பரில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்திற்கு கியாரா ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த படம் விமானப்படை பின்னணியில் ஒரு காதல் நாடகமாக இருக்கும் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.ஆனால் தற்போது தனுஷால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாமல் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விவாகரத்துக்கு பின்னர் தனுஷ் தனது இரண்டு மகன்களையும் தனது பட ப்ரோமோஷன்களுக்கு அழைத்து செல்வது என அவ்வப்போது அவர்களுடன் நேரத்தை செலவிட்டு வந்தார். ஆனால் நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை அவரே இயக்கி, நடிக்க உள்ள நிலையில், பட வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.இதன் காரணமாக இரண்டு மகன்களும் தனது தாயான ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இருந்து வருகின்றனர். அண்மையில் குடும்ப விழாவின் போது தன்னை விட வளர்ந்து நின்ற தனது மூத்த மகனான யாத்ராவை பார்த்து பெருமைப்படும் படியான புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இப்படி மகன்களை கண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடன் இருந்து வரும் நிலையில், தற்போது நடிகர் தனுஷ் பெரும் சோகத்தில் உள்ளாராம்.

ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்கு அருகில், ஒரு இடம் வாங்கி கிட்டத்தட்ட 200 கோடி மதிப்பிலான பிரம்மாண்டமான அரண்மனை வீட்டையே கட்டி அங்கு தனுஷ் வசித்து வருகிறார். ஆனால் அந்த மாளிகை வீட்டில் தனது மகன்கள், மனைவி இல்லாமல் தனுஷ் கவலையில் உறைந்து போயுள்ளாராம். இதன் காரணமாக படப்பிடிப்புகளில் கூட சோகமாகவே காணப்படுகிறாராம். இப்படி தனுஷ் தனியாக அவதிப்பட்டு வாழ்வதற்கு காரணம் ரஜினி விட்ட சாபம் தான் என கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

படத்தில் கியாரா சேர்வது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வரவில்லை. ஹிமான்ஷு சர்மா மற்றும் நீரஜ் யாதவ் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஹிமான்ஷு சர்மா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்