Thursday, May 2, 2024 8:25 pm

ஆர்யாவின் காதர் பாட்சாவை தட்டி தூக்கிய ஹிப்ஹாப் ஆதியின் வீரன் ! பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் வீரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக வசூலில் ஆர்யாவின் காதர் பாஷா எந்திர முத்துராமலிங்கம் மற்றும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் மூன்று நாட்கள் முடிவில் கிட்டத்தட்ட 4. 95 கோடி இந்தியாவில் வீரன் படம் கலெக்ஷன் செய்துள்ளது. மேலும் இதே நாளில் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம் வெளியாகி இருந்தது. எப்போதும் போல கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக முத்தையா இந்த படத்தை எடுத்திருந்தார்.மேலும் இந்த படத்தைப் பார்க்கும்போது சீரியல் பார்ப்பது போல இருப்பதாக சிலர் விமர்சனம் செய்திருந்தனர். இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனம் தான் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. ஆகையால் படத்தின் வசூலும் சற்று குறைந்துள்ளது. முதல் நாளில் காதர் பாட்சா படம் 1.1 கோடி வசூல் செய்தது.

மேலும் இரண்டாவது நாள் முடிவில் 1.22 கோடி வசூல் செய்திருந்தது. மூன்றாவது நாள் முடிவில் 1.8 கோடி மட்டுமே வசூல் பெற்றதால் மொத்தமாக இதுவரை 4.12 கோடி மட்டுமே வசூல் செய்து இருக்கிறது. சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் ஆர்யா இருந்தும் அவரைப் பின்னுக்கு தள்ளி ஹிப்ஹாப் ஆதி வீரன் படம் மூலம் வசூல் வேட்டையாடி வருகிறார்.

‘அன்பறிவு’ படத்திற்கு பிறகு இசையமைப்பாளர், நடிகர் என பன்முக கலைஞராக வலம் வரும் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் படம் ‘வீரன்’. ஹிப்ஹாப் ஆதியுடன் ஆதிரா, காளி வெங்கட், வினய், முனீஸ்காந்த், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாசில் ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘மின்னல் முரளி’ படத்தின் காப்பி என ஆக்‌ஷன் கலந்த காமெடி கலந்த ஃபேண்டஸி படத்தின் டிரைலர் கேள்விகளை எழுப்பியுள்ளது.

கோலிவுட்டில் இதற்கு முன் வெளியான சூப்பர் ஹீரோ படங்கள் எதுவும் வெற்றி பெறாத நிலையில், இந்தப் படத்தை தரமான சூப்பர் ஹீரோ படம் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். முன்னதாக வீரன் திரைப்படம் கோடை விடுமுறையில் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொன்னியின் செல்வன் 2 உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்