Thursday, May 2, 2024 8:17 pm

சோனியா அகர்வால் நடித்த ‘உன்னால் என்னால்’ படத்தின் முழு விமர்சனம் இதோ !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சோனியா அகர்வால், பிரமிக்க வைக்கும் இந்திய திரைப்பட நடிகை, முக்கியமாக தமிழ் சினிமாவில் பணிபுரிகிறார், அவரது பெயரில் சில படங்கள் உள்ளன. ‘காதல் கொண்டேன்’ போன்ற சூப்பர் ஹிட்களைக் கொடுத்த பிறகும், நடிகராக தனது வாழ்க்கையின் இரண்டாம் கட்டத்தில் அதை பெரிதாக்குவது நடிகைக்கு கடினமாக இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் சோனியா நடிக்கவிருக்கும் ‘உன்னால் என்னல்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

வறுமையின் காரணமாக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் நாயகர்கள் ஜெகா ,கே.ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ் மூவருக்கும் மூன்று விதமான குடும்ப பிரச்சினைகள். பணத்தால் மட்டுமே தங்களது பிரச்சனையை தீர்க்க முடியும் என்பதால், பணம் சம்பாதிக்கும் முயற்சியில் இவர்கள் இறங்குகிறார்கள். நேர்மையாக பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் இவர்கள் மூவரும் ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் மனம் நொந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் இவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கான பணத்தை சோனியா அகர்வால் கொடுக்க முன் வருகிறார். ஆனால், அவர் சொல்லும் ஒரு காரியத்தை மூவரும் செய்ய வேண்டும். அது என்ன? அதை மூவரும் செய்தார்களா? இல்லையா?, அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா? என்பதே ‘உன்னால் என்னால்’ படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ஜெகா, கே.ஆர்.ஜெயகிருஷ்ணா மற்றும் உமேஷ் மூவரும் பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கதாபாத்திரத்தை புரிந்து நடித்திருக்கிறார்கள். நாயகிகளாக நடித்திருக்கும் சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர் ஆகியோர் தலா ஒரு பாடல், சில காதல் காட்சிகள் என்று கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.டெல்லி கணேஷ், ஆர்.சுந்தராஜன், ராஜேஷ், ரவி மரியா ஆகியோரது அனுபவமான நடிப்பு கதைக்கு பலம் சேர்த்திருப்பதோடு, சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறது.

முதல் முறையாக வில்லி வேடத்தில் நடித்திருக்கும் சோனியா அகர்வால், குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார். அவருடைய வில்லத்தனத்தை முழுமையாக வெளிப்படுத்த இன்னும் கூடுதலான காட்சிகள் கொடுத்திருக்கலாம்.ஒளிப்பதிவாளர் கிச்சாஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல் காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பவர், படம் முழுவதையும் தரமாக பளிச்சென்று காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ரிஸ்வான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.எழுதி இயக்கியிருக்கும் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா, ரியல் எஸ்டேட் துறையின் கருப்பு பக்கங்களையும், மனித நேயத்துடன் வாழ்வது தான் அறம் என்பதையும் கமர்ஷியலாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அவருடைய முயற்சி பல இடங்களில் தோல்வியை தழுவி இருக்கிறது.

ரியல் எஸ்டேட் துறையின் கருப்பு பக்கங்களை காட்டுவதாக சொல்லிவிட்டு, அதுபற்றிய காட்சிகளை மிக குறைவாக வைத்திருக்கும் இயக்குநர், காதல் காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையின் போக்கை மாற்றியமைத்திருக்கிறார்.நல்ல கதை என்றாலும் திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளில் இயக்குநர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா சொதப்பியிருப்பது படம் முழுவதும் தெரிகிறது. குடும்ப வறுமையும், அதை சுற்றி இடம்பெறும் காட்சிகளும் படத்தில் திரும்ப திரும்ப வருவது படத்தை தொய்வடைய செய்கிறது.

மூன்று பேரின் பண பிரச்சனை தீருமா? என்ற கேள்வி மட்டும் எதிர்பார்ப்போடு படத்தை நகர்த்தி செல்வதோடு, இறுதியில் அவர்களின் பண பிரச்சனை தீரும் காட்சி ரசிக்க வைக்கிறது. இதே போல் படம் முழுவதும் இருந்திருந்தால், படத்தின் வெற்றியை ‘உன்னால் என்னால்’ என்று படக்குழு கொண்டாடி இருக்கலாம்.ரேட்டிங் 2.5/5

இப்படத்தை இயக்குனர் ஜெயகிருஷ்ணா இயக்குகிறார். படத்திற்காக சோனியா பாடிய அவர், “ஒரு சிறப்பு கேரக்டருக்கு எனக்கு ஒரு பவர்ஹவுஸ் பெர்பார்மர் தேவைப்பட்டது. சோனியா மேடம் பில் கச்சிதமாக பொருந்துகிறார்” என்று ஒரு ஆதாரம் தெரிவித்துள்ளது. படத்தின் ஸ்கிரிப்ட் பல்வேறு திருப்பங்களுடன் பொதிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படம் பற்றி ஜெயகிருஷ்ணா கூறும்போது, “படத்தில் ஜகா, உமேஷ், நான் என மூன்று ஹீரோக்கள், லுப்னா, நிஹாரிகா, சஹானா ஆகிய மூன்று கதாநாயகிகள். வாழ்வாதாரத்திற்காக தங்கள் சொந்த கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் மூன்று மனிதர்களைச் சுற்றி கதை நகர்கிறது. சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதிக்கும் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் பிரச்சினைகளில் இருந்து எப்படி வெளியேறுகிறார்கள் என்பது முக்கிய அம்சமாகும்.”

- Advertisement -

சமீபத்திய கதைகள்