Wednesday, September 27, 2023 10:59 am

மீண்டும் சிக்ஸ் பேக்கில் வரும் தல அஜித்! விடாமுயற்சி படத்தை பற்றிய ஹாட் அப்டேட் இதோ !

spot_img

தொடர்புடைய கதைகள்

பிரபல கன்னட நடிகர் திடீர் மருத்துவமனையில் அனுமதி

கன்னட திரை உலகின் பிரபல நடிகரான ஜனார்தன்(74) என்ற பேங்க் ஜனார்தன்...

லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் ரத்தை தொடர்ந்து லியோ படக்குழு போட்ட புதுப் பிளான் என்ன தெரியுமா ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் 'லியோ', 2023-ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...

சர்ச்சைக்கு உள்ளான எமி ஜாக்சனின் புதிய தோற்றம் !

எமி ஜாக்சன் ஒரு புதிய படத்திற்காக தனது மாற்றத்தை வெளியிட்டு தனது...

ஏன்டா எங்கள பாத்தா லூசு மாதிரி தெரியுதா உனக்கு ? லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சீண்டிய சவுக்கு சங்கர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் லியோ,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் அஜீத் குமார் தனது வரவிருக்கும் தமிழ் படமான விடா முயற்சிக்காக தயாராகி வருகிறார். அஜித்தின் 52வது பிறந்தநாளில் மகிழ் திருமேனி இயக்கும் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது, படத்தின் ஷூட்டிங் ஜூன் இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் டைட்டில் போஸ்டரில் அஜித் குமார் துப்பாக்கி ஏந்திய நிழற்படத்துடன், “முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது” என்ற கோஷத்துடன் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

தற்போது, அஜித் குமார் நேபாளத்தில் இருந்து பூடானுக்கு பைக் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அஜித் பயணம் முடிந்து திரும்பியதும் விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். ஜூன் மாதம் முதல் படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்புக்காக 40 நாட்கள் ஒதுக்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தல அஜித் தன்னுடைய படங்களில் பெரும்பாலும் தன்னுடைய உடல் எடை அதிகரிக்காமல் உடற்பயிற்சி செய்து வருவார். ஆனால் சில சமயங்களில் அது சரியாக அமையாமல் போய்விடும்.

ஆனால் விவேகம் படத்திற்காக கட்டுமஸ்தான உடலை ஏற்றி படம் முழுக்க மிரட்டலான தோற்றத்தில் வந்தார். கிளைமாக்ஸ் காட்சிகளில் சட்டையை கழற்றிக் கொண்டு அஜித் சண்டை போட தியேட்டரில் ரசிகர்கள் விசில் சத்தம் பறந்தது.

இந்நிலையில் மீண்டும் தன்னுடைய உடல் எடையில் அக்கறை எடுத்துக் கொண்டு இந்த நாட்களில் தீவிரமாக உடல் எடையை குறைத்து கட்டுமஸ்தான தோற்றத்திற்கு மாறி வருகிறாராம்.

விடாமுயற்சி படத்தின் மிரட்டலான தோற்றத்தில் இருக்க வேண்டும் என படம் ஆரம்பிக்கும்போதே வினோத் அஜித்திடம் கோரிக்கை வைத்தாராம். அதற்கேற்றார் போல் தற்போது வரை தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறாராம் அஜித் .

தற்போது படப்பிடிப்புகள் எதுவும் நடக்காத நிலையில் உடல் எடையை குறைத்து சிக்ஸ் பேக் வைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம் தல அஜித்.

இதனால் விவேகம் படத்தை போல விடாமுயற்சி படத்திலும் க்ளைமாக்ஸ் காட்சியில் சட்டையை கழற்றிவிட்டு சிக்ஸ் பேக்குடன் சண்டை போடுமாறு கதை அமைந்துள்ளதாக விடாமுயற்சி வட்டாரங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்தில் அஜீத் நேர்த்தியான மற்றும் ஃபிட்டான தோற்றத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் நடிகர்கள் விவரங்கள் இன்னும் மறைக்கப்பட்ட நிலையில், நடிகருடன் புதிய திறமையான நடிகர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கதாநாயகியாக த்ரிஷா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக யூகங்கள் உள்ளன. ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட நான்கு படங்களில் த்ரிஷாவும், அஜீத்தும் இதற்கு முன்பு திரையைப் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத் குமார் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இருவரும் வேதாளம் மற்றும் விவேகம் படங்களின் முந்தைய பணிகளைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் விடா முயர்ச்சி. இப்படம் 2024ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்