Sunday, May 28, 2023 6:17 pm

தளபதி 68 படத்தின் ஹீரோயின் இவரா லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

spot_img

தொடர்புடைய கதைகள்

அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா ? லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவின் பரபரப்பான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான அட்லீ தற்போது ஷாருக்கானின்...

டிமான்டே காலனி 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

அருள்நிதியின் கிராமிய சமூக நாடகமான கழுவேதி மூர்க்கன் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,...

பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய விஜய் ஆண்டனி!

நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியைக்...

ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கிறாரா ? லேட்டஸ்ட் அப்டேட்

கடந்த இரண்டு மாதங்களாக, ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு...
- Advertisement -

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் அப்டேட்களே தினமும் புதியதாக ஏதாவது ஒன்று வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்தின் அப்டேட்களும் இணையதளத்தில் தினமும் வெளி வந்து கொண்டிருக்கிறது.

மேலும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி, தளபதி 68 திரைபடத்தின் முழு அப்டேட் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது, இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, இதன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என அனைத்தும் அந்த வீடியோவில் உள்ளது.

யுவன் சங்கர் ராஜா 20 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் அந்த வீடியோவில் புதிர் போன்று வடிவமைக்கப்பட்டு அதில் உள்ள பெயர்களை பேனாவை கொண்டு வட்டமிட்டு காட்டி இருக்கின்றார். இதன்படி இந்த படத்தின் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பார் என தெரிகிறது.

தற்போது நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஜாவான் திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு தளபதி 68 படத்தில் நடிப்பார் என தெரிய வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கிறது. அடுத்த ஆண்டு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்