Saturday, June 3, 2023 10:52 pm

தளபதி 68 : விஜய் வெங்கட்பிரபு கூட்டணி உருவாக முக்கிய காரணமே இவரா ! ரசிகர்கள் ஷாக்

spot_img

தொடர்புடைய கதைகள்

சிம்பு பாடிய டக்கர் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

சிலம்பரசன் டிஆர் மற்றும் ஆண்ட்ரியா ஜெரிமியா ஆகியோர் சித்தார்த் நடித்த டக்கர்...

நிகில் சித்தார்த்தா நடித்த சுயம்பு படத்தின் முதல் மோஷன் போஸ்டர் இதோ !

நிகில் சித்தார்த்தா தனது 20வது படத்தின் தலைப்பை இறுதியாக வெளியிட்டுள்ளார். ஸ்வயம்பு...

சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்! செவி சாய்ப்பரா அஜித்!எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அஜித் குமார் தனது வரவிருக்கும் விடமுயற்சி படத்திற்காக நடிக்க தயாராகிவிட்டார். அவரது...
- Advertisement -

நாக சைதன்யா மற்றும் கிருத்தி ஷெட்டி நடித்த வெங்கட் பிரபுவின் கஸ்டடி, கடந்த வார இறுதியில் திரையரங்குகளில் வெற்றி பெற்றது, இயக்குனரின் அடுத்த படம் குறித்த யூகங்கள் இணையத்தில் உலாவுகின்றன.

தளபதி 68 படத்திற்காக வெங்கட் பிரபு நடிகர் விஜய்யை இயக்கவுள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக சலசலப்பு தெரிவிக்கிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை இல்லை. இதற்கிடையில், கடந்த ஆண்டு யூடியூப் சேனலுக்கு வெங்கட் பிரபு அளித்த பேட்டியின் துணுக்கு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த கத்தி- லைக்கா, பிகில்- ஏஜிஎஸ், சர்கார் மற்றும் பீஸ்ட்- சன் பிக்சர்ஸ் இது போன்ற பெரிய நிறுவனங்களுக்கு மாத்தி மாத்தி படங்களை கொடுத்து வந்தார். தற்போது திடீரென்று ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இதெல்லாம் இவருடைய சாய்ஸாக வருகிறது. மேலும் இவருடைய 68வது படத்தை இயக்குவதற்காக இயக்குனர் அட்லீ, கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி போன்ற பல இயக்குனர்கள் விஜய் இடம் கதை சொல்லி இருக்கிறார்கள்.

இதனால் விஜய் அவருடைய அடுத்த படத்தை எந்த இயக்குனரிடம் கொடுப்பார் என்று எதிர்பார்த்து நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக வெங்கட் பிரபு என்டரி கொடுத்து வாய்ப்பை ஈஸியாக தட்டி தூக்கி விட்டார். அதேபோல பிகில் படத்திற்கு பின் மறுபடியும் விஜய்யை வைத்து தயாரிக்க வேண்டும் என்று பெரிய ஆசையில் இருந்தது ஏஜிஎஸ் நிறுவனம். இது பற்றிய முன்னாடியே விஜய் இடம் சொல்லி ரெண்டு வருஷமாக யாருக்கும் தெரியாமல் சீக்ரட்டாக விஜய்யின் கால் சீட்டை லாக் செய்து விட்டார்.

அதற்கு ஏற்ற மாதிரி வெங்கட் பிரபு, தளபதி 68 படத்தை இயக்குவது முடிவான நிலையில் இவர்கள் கூட்டணியில் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்க போவதாக உறுதியாகிவிட்டது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ல் வெளியிடுவதற்கு எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார்கள். கண்டிப்பாக விஜய்யின் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கப் போகிறது.

மேலும் வெங்கட் பிரபு எப்படி அஜித்துக்கு மங்காத்தா, சிம்புக்கு மாநாடு படத்தை கொடுத்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். அதே மாதிரி விஜய்க்கும் யாரும் எதிர்பார்க்காத விதமாக செம பிரம்மாண்டமான படத்தை கொடுத்து ரசிகர்களை திருப்திப்படுத்துவார் என்ற பெரிய எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.

விஜய்யுடன் அவரது சாத்தியமான ஒத்துழைப்பைப் பற்றி கேட்டபோது, ​​வெங்கட் பிரபு, நடிகரை ஈர்க்கும் மற்றும் உற்சாகப்படுத்தும் என்று நம்பும் ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி வருவதாகக் கூறினார். “அவரிடமிருந்து என்னால் முன்னேற முடியும் என்று நான் நம்புகிறேன், மேலும் அவருடன் பணிபுரிய ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார். இந்நிலையில் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்