Wednesday, June 19, 2024 9:20 am

ஆட்டமே இனிமேல தான் !விடாமுயற்சி படத்திற்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு.! ஏற்றுக்கொள்வார்களா ரசிகர்கள்.?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘துணிவு’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித், இயக்குனர் மகிழ் திருமேனியுடன் தனது 62வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். படத்திற்கு ‘விடாமுயற்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது மற்றும் அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று திரைப்பட தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. படத்தின் மற்ற நடிகர்கள் யார் என்பதை திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.

அஜித் குமாருக்கு உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுலா செல்ல வேண்டும் என்பதுதான் விருப்பம். அதன் முதல் கட்டமாக தமிழகத்தில் வெள்ளக் கோயிலில் இருந்து தன்னுடைய பயணத்தை துவங்கி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் தன்னுடைய சுற்றுலாப் பயணத்தை பல்வேறு இடங்களில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய முதல் சுற்றில் இந்தியா, நேபால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளை நிறைவு செய்திருக்கிறார்.

அதேபோல் ஈரோப்பா மற்றும் தாய்லாந்து நாடுகளில் சில இடங்களில் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இப்போது அஜித் தனது 62-வது படமான விடாமுயற்சி படத்திற்காக டூரை முடித்து 8ம் தேதி சென்னை வந்து விட்டார். வந்தவர் ஒரு மாதம் ஓய்வு எடுக்கும் முடிவில் இருக்கிறார்.ஆனால் ஓய்வு என்று சொல்ல முடியாது. இந்த ஒரு மாதத்தில் அவர் விடாமுயற்சி படத்திற்கு பொருந்தும் ஹீரோவாக ரெடியாகப் போகிறார். ஏனென்றால் துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் கன்னத்தில் ஓவர் வெய்ட், வயிற்றில் சிறிய தொப்பை என அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் ஏகே .

இப்பொழுது எல்லாத்தையும் குறைக்க போகிறார். இனிமேதான் அஜித்தோட கேம் ஸ்டார்ட் ஆக போகிறது. இதுவரை அஜித் இந்த படத்தில் கதையை முழுமையாக கேட்கவில்லை. ஆகையால் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் கதை சொல்வதற்கு ரெடி பண்ணி வைத்திருக்கிறார் மகிழ்திருமேனி. இனி தான் அஜித் அந்த கதையை கேட்கப் போகிறார். அதன் பின் என்ன ஆட்டம் போடப்போகிறார் என்று தெரியவில்லை.இதையெல்லாம் நினைத்து விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி தொடை நடுங்குகிறாராம். அதே சமயம் அஜித்துக்கு ஏத்த ஆக்சன் கதையை தான்அவர் கையில் வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் அஜித் அந்த கதையை கேட்டு படப்பிடிப்பில் இறங்கினால் மட்டுமே மகிழ்திருமேனி நிம்மதி பெருமூச்சு விட முடியும். அதுவரை அவர் பதட்டத்தோடு தான் இருந்து கொண்டிருக்கிறார்.

எனவே விடாமுயற்சியின் படப்பிடிப்பை வரும் 22ஆம் தேதி துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்களப்பணிகள் அனைத்தும் தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஜித்தும் தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். அதேசமயம் இனிவரும் விடாமுயற்சி படத்திற்கான அஜித்தின் நியூ லுக் வெளிவர போகிறது. அதை பார்க்க தல ரசிகர்களும் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

மே கடைசி வாரத்தில் படம் தொடங்கும் என்றும், படத்தின் முதல் ஷெட்யூல் தொடர்ந்து 70 நாட்கள் நடைபெறும் என்பதும் புதிய அப்டேட். நடந்து கொண்டிருக்கும் உலக பைக் பயணத்தில் இருந்து அஜித் விரைவில் திரும்ப உள்ளார். நடிகர் கடைசியாக நேபாளத்தில் காணப்பட்டார், மேலும் படப்பிடிப்புடன் தனது பிஸியான வேலை அட்டவணையை மீண்டும் தொடங்குவார். ‘விடாமுயற்சி’ ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் என்றும், 2024 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மற்ற செய்திகளில், நீரவ் ஷா தற்போது அஜித்துடன் உலக பைக் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார், மேலும் அவர் நடிகரின் முழு பயணத்தையும் ஆவணப்படுத்துவார் என்றும் அது ஒரு ஆவணப்படமாக உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த ஆவணப்படம் பொதுவில் வெளியிடப்படுமா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்