Friday, December 1, 2023 5:53 pm

லோகேஷுக்கு போட்டியாக மூன்று முக்கிய ஹீரோக்களை வைத்து இயக்குனர் ஹரி போடும் LCU ! ரசிகர்கள் கொண்டாட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பிரபு ராம் வியாஸுடன் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

முன்னதாக, நடிகர் மணிகண்டன், அறிமுக திரைப்பட தயாரிப்பாளர் பிரபு ராம் வியாஸுடன்...

விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் படத்தின் பூஜை புகைப்படம் வைரல் !

வி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் கலைப்புலி எஸ் தாணு தயாரித்த அடுத்த...

நடிகை ஆர் சுப்பலட்சுமி காலமானார்

வியாழன் அன்று திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் சுப்பலட்சுமி திருவனந்தபுரத்தில் காலமானார்....

மிஷ்கின் – விஜய் சேதுபதி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இதோ !

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக நாம் முன்பே...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குனர் ஹரி மற்றும் சூர்யா இருவரும் இணைந்து ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 02’ மற்றும் ‘எஸ் 3’ என தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் புதிய படமான ‘அருவா’வில் மீண்டும் இணைவதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் பல்வேறு காரணங்களால் அது கைவிடப்பட்டது. சூர்யா மீது ஹரி அதிருப்தி அடைந்ததாகவும், அவர் அருண் விஜய்யை வைத்து ‘யானை’ படத்தை இயக்கி பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட்டானதாகவும் கூறப்பட்டது.சனிக்கிழமையன்று ஹரி மற்றும் அவரது மனைவி நடிகை ப்ரீத்தா குட் லக் ஸ்டுடியோஸ் என்ற புதிய வணிக முயற்சியைத் தொடங்கினார்கள். விழாவில் தமிழக அரசின் சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர்கள் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், பி.கே ஆகியோர் தலைமையில் ஸ்டுடியோவை சூர்யா திறந்து வைத்தார். சேகர்பாபு, மனோ தங்கராஜ் மற்றும் நடிகர் விஜயகுமார்.

இயக்குனர் ஹரி கோவில், சாமி, தாமிரபரணி, அருள் போன்ற அதிரடி ஆக்சன் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். பெரும்பாலும் அதிரடி காட்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர் படங்களில் காமெடிக் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது. 2010ல் இவர் இயக்கிய சிங்கம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அந்த படத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கும் மிகப்பெரிய திருப்புமுறையாக இந்த படம் அமைந்தது.

அதன் பின்னர் சிங்கம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் கவனம் செலுத்திய ஹரிக்கு அதெல்லாம் மிகப்பெரிய சருக்கலாகவே அமைந்தது. அதற்கு அடுத்து இவர் இயக்கிய பூஜை, வேங்கை போன்ற படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஹரி தன்னுடைய உறவினரான நடிகர் அருண் விஜய்யை வைத்து யானை படத்தை இயக்கினார். குடும்பப் பின்னணி கொண்ட கதை என்றாலும் இது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதற்கிடையில் தனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த சூர்யாவுடன் இவர் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நேரத்தில், இவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ கருத்து வேறுபாடு எனவும், இனி இவர்கள் இணைவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் ஹரி தன்னுடைய சொந்த ஸ்டூடியோ ஒன்றை திறந்திருந்தார். அந்த திறப்பு விழாவுக்கு நடிகர் சூர்யா பங்கேற்றதால் இவர்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்பது உறுதியானது.

ஸ்டூடியோ திறந்த கையோடு ஹரி தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளையும் தொடங்கி இருக்கிறார். ஹரிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த தாமிரபரணி படத்தில் நடித்த நடிகர் விஷாலுடன் இணைய இருக்கிறார். விஷாலுக்கும் அடுத்தடுத்து சறுக்கல்கள் ஏற்படுவதால் தன்னுடைய வெற்றி இயக்குனரான ஹரியுடன் இணைந்து அதிரடி ஆக்சன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

மேலும் ஹரி நடிகர் கார்த்தியை வைத்து படம் பண்ணுவதற்கான பேச்சு வார்த்தையும் முடிவடையும் கட்டத்தில் இருக்கிறதாம். கார்த்தி ஏற்கனவே கொம்பன் மற்றும் விருமன் போன்ற படங்களில் ஆக்சன் ஹீரோவாக கலக்கியிருந்தார். இவர் ஹரி ஸ்டைலில் படம் பண்ணினாலும் ரசிகர்களால் வரவேற்கப்படும். இந்த படத்தின் வேலைகளையும் ஹரி அடுத்து ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

மேலும் நடிகர் சூர்யாவுடன் ஹரி இணைவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதற்கான பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். இந்த மூன்று படங்களையும் வரும் 2024க்குள் முடித்து விட வேண்டும் என்று ரொம்பவும் உறுதியாக இருக்கிறாராம் இயக்குனர் ஹரி. இந்த முறை விட்டதை பிடித்து விட வேண்டும் என்று அடுத்தடுத்து ஆக்சன் ஹீரோக்களுக்கு வலைவீசி இருக்கிறார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பம் குட் லக் தியேட்டரை வைத்திருந்ததை நினைவு கூர்ந்த ப்ரீத்தா, இப்போது அவர்கள் தங்கள் பிராண்டை ஒரு ஸ்டுடியோவாக மறுஉருவாக்கம் செய்துள்ளனர், அது ரெக்கார்டிங், டப்பிங் மற்றும் எடிட்டிங் ஆகியவற்றிற்கு கிடைக்கும். 1998ல் வெளியான ‘சந்திபோமா’ படத்தில் சூர்யாவும், ப்ரீத்தாவும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ படப்பிடிப்பில் இருக்கிறார், அதன் பிறகு அவர் வெற்றிமாறனின் பிரம்மாண்டமான படமான ‘வாடிவாசல்’ படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்