Saturday, June 15, 2024 9:46 am

குடியால் வந்த வினை ! ரோபோ ஷங்கர் துரும்பாக மெலிந்து போனதற்கு காரணம் இதுதான்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ரோபோ சங்கர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர், மேலும் அவர் பல்வேறு தமிழ் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர். ஆரோக்கியமாக இருந்த ரோபோ ஷங்கர், லேட்டஸ்ட் படத்தில் பாதி அளவில் இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்போதிருந்து, நடிகரின் மெலிதான தோற்றத்தைப் பார்த்து ரசிகர்கள் ரோபோ ஷங்கரின் உடல்நிலை குறித்து கவலைப்படத் தொடங்கினர், ஆனால் வரவிருக்கும் தமிழ் படத்தில் நடிக்கும் நடிகர் தனது உடல் எடையை குறைத்துள்ளதால், எல்லாம் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா யூடியூப்பில் அளித்த பேட்டியின் மூலம் உறுதி செய்துள்ளார், மேலும் அவரது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். அதை ரகசியமாக வைத்திருக்க, நடிகர் தனது எடையை குறைத்த படத்தின் பெயரை பிரியங்கா ரோபோ ஷங்கர் வெளியிடவில்லை.

மிமிக்ரி கலைஞராக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரோபோ சங்கர். பல மேடைகளில் இவர் கலந்து கொண்டு மிமிக்ரி செய்துள்ளார். விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகம் பிரபலமானார். நல்ல கட்டுமஸ்தான உடலை கொண்டவர் இவர். தீவிர கமல் ரசிகரான ரோபோ சங்கர் ஆளவந்தான் படத்தை பார்த்து அதில் வரும் கமலை போல உடம்பை ஏற்றியிருக்கிறார்.

டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ரோபோ சங்கருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. அதைப்பயன்படுத்தி அவரும் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு நெருக்கமானார். ஆனால், திடீரென உடல் எடை குறைந்து மெலிதான தோற்றத்துக்கு மாறிய அவரின் புகைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சி? ஏன் இப்படி இளைத்து போனார்? என சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பேச துவங்கினர். எனவே, இதுபற்றி விளக்கமளித்த அவரின் மனைவிஒரு திரைப்படத்திற்காக இப்படி உடலை இளைத்துள்ளார் என விளக்கமளித்தார்.

ஆனால், அவர் சொன்னதில் உண்மையில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது. ரோபோ சங்கருக்கு பல வருடங்களாகவே மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அதோடு, அசைவ உணவுகளையும் கட்டுப்பாடின்றி சாப்பிட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது. இதில், சோகம் என்னவெனில் ஆறு மாதமாக அவரின் உடலில் மஞ்சள் காமாலை இருந்துள்ளது அவருக்கே தெரியவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பியவருக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவரின் உடலை சோதிக்கப்பட்டபோதுதான் இந்த உண்மை அவரின் குடும்பத்தினருக்கே தெரியவந்துள்ளது. கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வந்துள்ளது.

அதன் காரணமாகத்தான் அவரின் உடல் உடையும் குறைந்துள்ளது. இதில் நல்ல விஷயம் என்னவெனில் கடந்த ஆறு மாதங்களாக ரோபோ சங்கர் மது அருந்துவதை விட்டுள்ளார். அதுதான் அவரின் உயிரையும் தற்போது காப்பாற்றியுள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர் மருத்துவரின் கண்காணிப்பில்தான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோபோ ஷங்கர் தனது சிறிய திரை நிகழ்ச்சிகளால் புகழ் பெற்றார், பின்னர் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்று வெள்ளித்திரையில் அறிமுகமானார். ஆனால் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்த ‘படையப்பா’ படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரோபோ ஷங்கர், அங்கீகாரம் இல்லாத கதாபாத்திரத்தில் நடித்தார். ரோபோ ஷங்கர் இப்போது துணை வேடங்களில் நடிப்பதற்கு நன்றாக வளர்ந்துள்ளார், மேலும் அவர் கடைசியாக 2023 இல் வெளியான ‘கோதை’ திரைப்படத்தில் பெரிய திரைகளில் காணப்பட்டார்.
ரோபோ ஷங்கர் தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார், மேலும் பிஸியான நடிகர் அவர்களுக்காக இரவு பகலாக உழைத்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்