Tuesday, April 30, 2024 12:31 pm

இது மட்டும் உண்மை என்றால் அஜித் 62 படம் கண்டிப்பாக ஹிட் தான் ! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விக்னேஷ் சிவன் AK 62 படத்தில் அஜித் குமாரை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. படத் தயாரிப்பாளரும் இந்த வாய்ப்பைப் பற்றி மிகவும் உற்சாகமாக இருந்தார். இருப்பினும் அவர் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி நியமிக்கப்பட்டார். நானும் ரவுடி தான் படத் தயாரிப்பாளர் இப்போது இந்த வளர்ச்சிக்கு பதிலளித்துள்ளார்.

விக்னேஷ் ஒரு புதிய பேட்டியில், ஸ்கிரிப்ட்டின் இரண்டாம் பாதி தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறினார். மேலும், ஏகே 62 இலிருந்து நீக்கப்பட்டதில் அஜித்துக்கு எந்த பங்கும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஏகே 62 கொடுத்த டார்ச்சரில் அஜித் வேர்ல்ட் டூரையே தள்ளி வைத்து விட்டார். ஏனென்றால் விஜய் வாரிசு படத்தை முடித்துவிட்டு லியோ படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் துணிவு படத்திற்கு பிறகு இன்னும் கதை கூட தயாராகாமல் இருக்கும் ஏகே 62 படத்தை நினைத்து தல ரசிகர்கள் பெரும் கலக்கத்தில் இருந்தனர்.

ஆனால் இப்போது ஏகே 62 படத்திற்கு மொத்தத்தையும் அஜித் லிஸ்ட் போட்டுவிட்டார். இதனால் மகிழ்திருமேனியும் பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்துள்ளார். ஏனென்றால் முதலில் மகிழ்திருமேனி கதையும் ஆப்ஷனில் தான் இருந்தது. அதன்பின் கொடுத்த டேட்டிற்கு ஏதாவது படம் எடுத்தே ஆக வேண்டும் என ஒரு கொரியன் படத்தில் ரீமேக் பற்றிய பேச்சுக்கள் அடிபட்டது.

ஏகே 62 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, ஏற்கனவே பெரிய ஹிட் ஆன கொரியன் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருந்தது. பேசாமல் அதை அஜித்தை வைத்து எடுத்துவிடலாம் என்று மகிழ்திருமேனியின் கதையை நிராகரித்தது. ஆனால் கொரியன் படத்தின் கதையும் திருப்தி அடையாத அஜித், கடைசியில் மகிழ்திருமேனி கதையில் சில சேஞ்சஸ் சொல்லி ரெடி பண்ண ஒத்துக்கொண்டார்.

அப்படி என்றால் அஜித்திடம் இருந்து வரவேண்டிய ஃபீட்பேக் எல்லாம் வந்துவிட்டது. அஜித்தை பொருத்தவரைக்கும் ஒரு விஷயம் சினிமாவில் சொல்கிறார்கள். அவர் பேசி முடித்து விட்டால் அவ்வளவுதான். இனிமேல் வாயை திறக்க மாட்டார், எதிலையுமே தலையிட மாட்டார். முதலிலேயே எல்லாவற்றையும் ஒரு பேச்சாக முடித்து விடுவார்.

அஜித்திடம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டால் நேராக பூசணிக்காய் உடைத்து விட வேண்டியது தான் என்று கூட சொல்வார்களாம். கடைசியாக அஜித் தன்னுடைய கதையை தான் ஓகே சொன்னதால் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கும் மகிழ்திருமேனி, அஜித் சொன்ன கரெக்சன் எல்லாம் சரி செய்து கொண்டிருக்கிறார். நிச்சயம் இந்த படம் அவருடைய கேரியருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்.

ஆகையால் இனி வரும் நாட்களில் ஏகே 62 படத்தை குறித்த அப்டேட் வரிசையாக வர துவங்கும். அதே சமயம் முதல் கட்ட படப்பிடிப்புக்கு எல்லா ஏற்பாடுகளும் அறக்கப் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. அதை போல் படத்தின் கதைக்கு ஏற்ப மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

அஜித் முன்னதாக ஆஞ்சநேயா, மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களில் காக்கிச் சட்டை போட்டுள்ளார். மேலும் போலீஸ் கதையை படமாக எடுப்பதில் வல்லவர் என்பதை நிரூபித்தவர் மகிழ்திருமேனி . அதனால் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்தார் என்றால் அந்த கதை நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அப்படி என்றால் தலக்கு இன்னொரு ஹிட் பார்சல் தான். போலீஸ் கதை அஜித்துக்கும், மகிழ் திருமேனிக்கு ராசி என்பதால் அஜித் 62 படம் கண்டிப்பாக ஹிட்டாகும்.அதே போல் இப்படம் புதுப்பேட்டை போல் அரசியல் கலந்த கேங்ஸ்டர் கதை என்று கிசுகிசுக்கப்படுகின்றது. போலீசா அல்லது அரசியல் கலந்த கேங்ஸ்டர் கதையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

அஜித் மற்றும் தயாரிப்பாளர்கள் AK 62 என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்பவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ தலைப்புடன் அதை வெளியிட காத்திருக்கிறார்கள். AK 62, நாம் அனைவரும் அறிந்தபடி, விக்னேஷ் சிவனுடன் தொடர்புடையது, இப்போது அவர் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதால், வெளியீட்டு சரியான தலைப்பில் செய்யப்பட வேண்டும் என்று குழு கருதியது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்