திரையுலகில் எந்த பின்னணியும் இல்லாமல் தானாக முயற்சிகள் செய்து நடிக்க துவங்கியவர் நடிகர் அஜித் குமார். அமராவதி என்கிற திரைப்படம் மூலம் அஜித் நடிக்க துவங்கினார். அதன்பின் பல திரைப்படங்களில் சாக்லேட் பாயாக நடித்தார். ஆசை, காதல் கோட்டை ஆகிய படங்கள் அவரின் மார்க்கெட்டை உயர்த்தியது. அதன்பின் பல படங்களில் நடித்தார். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை தோல்வி படங்களே. அதன் பின்னர்தான் ஆக்ஷன் கதைகளில் நடிக்க துவங்கினார். தீனா, பில்லா மற்றும் மங்காத்தா ஆகிய படங்கள் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களையும் பெற்று கொடுத்தது. தற்போது மாஸ் ஹீரோவாக மாறிவிட்ட அஜித் ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் மங்காத்தா. பில்லா திரைப்படம் அஜித்தை ஸ்டைலீஷான ஹீரோவாக மாற்றினாலும், மங்காத்தா திரைப்படம்தான் அவரை மாஸ் ஹீரோவாக மாற்றியது. தற்போது வரை அந்த ரூட்டில்தான் அஜித் பயணித்து வருகிறார். இயக்குனர் வெங்கட்பிரபு அவருக்கு தம்பி போன்றவர். ஜீ படத்தில் அஜித்துடன் நடித்தபோது அவருக்கு நெருக்கமானார். சென்னை 28, சரோஜா ஆகிய படங்களை இயக்கிவிட்டு அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கினார் வெங்கட்பிரபு.இவரிடம் அஜித் வாய்ப்பு கட்ட சம்பவமும் நடந்துள்ளது. இதுபற்றி சொன்ன வெங்கட்பிரபு ‘நான் சென்னை 28 படம் எடுத்து கொண்டிருந்த போது ஒரு புது நம்பரில் இருந்து போன் வந்தது. நானும் சென்னை 28தான். நல்லா பவுலிங் போடுவேன். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். எனக்கு நடிக்கிறதுக்கு எதாவது வாய்ப்பு இருந்த கொடுங்க’ன்னு ஒருவர் பேசினார். முதலில் அந்த குரல் எனக்கு பிடிபடவில்லை. அப்புறம்தான் தெரிஞ்சது பேசினது அஜித் சார்னு. என்னை எப்பவும் கலாய்த்துக்கொண்டே இருப்பார். என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்’ என வெங்கட்பிரபு பேசியுள்ளார்.
தொடர்புடைய கதைகள்
சினிமா
கேரளா ஸ்டோரி பற்றி மனம் திறந்து பேசிய கமல்
இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன்....
சினிமா
அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா ? லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ் சினிமாவின் பரபரப்பான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான அட்லீ தற்போது ஷாருக்கானின்...
சினிமா
டிமான்டே காலனி 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !
அருள்நிதியின் கிராமிய சமூக நாடகமான கழுவேதி மூர்க்கன் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,...
சினிமா
பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய விஜய் ஆண்டனி!
நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியைக்...
சமீபத்திய கதைகள்