Friday, April 26, 2024 11:35 pm

ஸ்டாலின் முதல் சரத்குமார் வரை மறைந்த அஜித் தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் அஜித்தின் தந்தை பி.சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மலையாளி பி சுப்ரமணியம், அவருக்கு வயது 85. அவருக்கு மோகினி என்ற மனைவியும், அனுப்குமார், அஜித்குமார், அனில் குமார் ஆகிய மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். அவரது தந்தையான பி சுப்ரமணியம் கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என தகவல் வெளியாகியிருந்தது.

இவருக்கு மோகினி என்கிற மனைவியும், அனில் குமார், அனூப் குமார் மற்றும் அஜித் குமார் என மூன்று மகன்களும் உள்ளனர். தந்தையின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள நடிகர் அஜித்திற்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.


இந்நிலையில் தந்தையின் திடீர் மறைவு குறித்து அஜித்தும், அவரது சகோதரர்களும் இணைந்து அறிக்கை ஒன்றிணைத்து தற்போது வெளியிட்டுள்ளனர். அதாவது “எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் ரொம்பவே கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை சிறப்பாக இதுவரை காலமும் வாழ்ந்து வந்தார்.

நாம் கவலையில் உள்ள இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நாம் நம்புகிறோம்” எனக் குறிப்பிடடுள்ளனர்.

அதுமட்டுமல்லாது எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க. கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்” எனவும் மனதை உருக்கும் வகையில் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பதிவானது தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருவதோடு அஜித்திற்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமாருக்கு எனது ழுந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்னும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அஜித்தின் தந்தை பி சுப்ரமணியத்தின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று காலை 10 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவரது உடலுக்கு சில திரையுலகப் பிரபலங்கள் மாத்திரம் நேரில் சென்று அஞ்சலி வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எந்தெந்த பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விபரம் வெளியாகவில்லை. மேலும் அவர் நீண்ட நாட்களாகவே உடல் நோயால் பாதிக்கப்பட்டதால் இன்றே தகனம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகிள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகினர் மற்றும் நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் செய்திகள் குவிந்து வருகின்றன. நட்சத்திர நடிகர் தனது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளுடன் ஐரோப்பாவில் விடுமுறையில் இருக்கிறார், விரைவில் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனுப்குமார், அஜித் குமார் மற்றும் அனில் குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் தந்தை பி.எஸ்.மணி, நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை தூக்கத்தில் காலமானார். அவருக்கு வயது 85.

- Advertisement -

சமீபத்திய கதைகள்