32 C
Chennai
Saturday, March 25, 2023

இயக்குனர் கனகராஜுக்கும் விஜயகாந்துக்கும் இடையே இப்படியொரு உறவு இருக்கா? கசிந்த உண்மை இதோ !

Date:

தொடர்புடைய கதைகள்

யார் இந்த பெசன்ட் ரவி ? இறுதி வரை...

சூப்பர் ஸ்டார் அஜித் குமாரின் தந்தை பி சுப்பிரமணியம் சென்னையில் வெள்ளிக்கிழமை...

துல்கர் சல்மான் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

துல்கர் சல்மான் தனது 28 வயதில் திரைப்படத்தில் அறிமுகமானார், பல நட்சத்திர...

‘விடுதலை’ ரிலீஸுக்கு முன்னதாக வெற்றி மாறன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...

வெற்றி மாறன் தனது அடுத்த வெளியீடான 'விடுதலை' படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில்...

தனது அப்பாவை இழந்து தவிக்கும் நிலையில் அஜித்திற்கு லைகா...

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

விஜய் சத்யா நடித்த ரஜினி படத்தின் ட்ரைலர் இதோ...

விஜய் சத்யாவின் ரஜினி படத்தின் டிரைலரை தயாரிப்பாளர்கள் வியாழக்கிழமை வெளியிட்டனர். வெங்கடேஷ்...

தளபதி விஜய்யின் ‘லியோ’ தமிழ் சினிமாவில் மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திட்டங்களில் ஒன்று. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் இணைந்து தயாரிக்கும் பிக்கி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழு தொடர்ந்து ரசிகர்களுக்கு அப்டேட்களை வழங்கி வருகிறது.

சினிமா உலகில் அனுதினமும் போராடி வரும் உதவி இயக்குனர்களுக்கு ஒரு உந்துதல் தேவை. அந்த உந்துதலுக்கு ஒரு இயக்குனர் மிகவும் Inspiration ஆக இருப்பார். அவ்வாறு பல உதவி இயக்குனர்களுக்கு Inspiration ஆக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். ஆனால் ஒரு வேடிக்கை என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் யாரிடமும் உதவி இயக்க்குனராக பணியாற்றியது இல்லை.

லோகேஷ் கனகராஜ் தொடக்கத்தில் வங்கி பணியாளராக இருந்தார் என்பதை பலரும் அறிவார்கள். இவ்வாறு வங்கி பணியாளராக இருந்த ஒருவர் எப்படி சினிமாவுக்குள் நுழைந்தார் என்பதை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.

அதாவது விஜயகாந்த்தின் ராவுத்தர் புரொடக்சன்ஸில் சௌந்தர் என்று ஒருவர் பணியாற்றி வந்தாராம். அவர்தான் விஜயகாந்த்துக்கு வரும் கதைகளை எல்லாம் கேட்பாராம். அவருக்கு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருந்ததாம். அதன்படி மனோபாலாவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரித்தாராம். ஆனாலும் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை என்பதால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கிவிடலாம் என்று நினைத்தாராம்.

அந்த சமயத்தில் சௌந்தர், தனது மகளுக்கு வரன் பார்த்துக்கொண்டிருந்தாராம். அப்போதுதான் வங்கி பணியாளரான லோகேஷ் கனகராஜ்ஜை தனது மகளுக்கு திருமணம் முடித்துவைத்திருக்கிறார். இவ்வாறு சௌந்தரின் மகளுக்கு கணவராக ஆன லோகேஷ் கனகராஜ், ஒரு கட்டத்தில் தனது வேலையை உதறிவிட்டு சினிமா எடுக்க முயற்சிக்கிறார். அப்படி அவர் இயக்கிய குறும்படம்தான் “களம்”. இக்குறும்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்துதான் லோகேஷ், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை அணுகியிருக்கிறார். அப்படி அவர் இயக்கிய திரைப்படம்தான் “மாநகரம்”. இவ்வாறு விஜயகாந்த்திற்கும் லோகேஷுக்கு இப்படி ஒரு தொடர்பு இருந்திருக்கிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரில் லலித் குமார் தயாரித்துள்ள ‘லியோ’ படத்திற்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி, மிஷ்கின், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்திய கதைகள்