Saturday, April 1, 2023

AK62 படத்தின் டைட்டிலை லாக் செய்த மகிழ்திருமேனி ! ஒகே சொன்ன அஜித் !தரமான சம்பவம்

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

அஜித்தின் அடுத்த பெரிய திட்டமாகும், இது லைகா புரொடக்ஷன்ஸ் என்ற பேனரின் தயாரிப்பு முயற்சியாகும். முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை OTT தளமான Netflix பெற்றுள்ளது. இருப்பினும் திரைப்பட தயாரிப்பாளர் மாற்றப்பட்டார், மேலும் இந்த திட்டம் நடிகர் அஜித்தின் அலுவலகத்தில் குறைந்த முக்கிய பூஜை விழாவை நடத்தியதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்.அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் காத்திருக்கும் நிலையில், இயக்குனர் மகிழ் திருமேனி AK 62 படத்தை அனிருத் இசையமைப்பதாகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏகே 62 ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் என்று கூறப்படுகிறது, மேலும் இது அதிகாரப்பூர்வமாக மார்ச் 2023 இல் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது படங்கள் மட்டுமில்லாமல் பட அறிவிப்பையும் வேறலெவலில் கொண்டாடுவார்கள் ரசிகர்கள். இவரின் ‘துணிவு’ படம் அண்மையில் வெளியானது. இந்தப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள ‘ஏகே 62’ பட அறிவிப்பிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியானது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘துணிவு’ படத்தில் போனி கபூர், எச். வினோத், அஜித் மூவரும் இணைந்தனர். இந்தப்படத்தில் மஞ்சு வாரியர் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவர்களுடன் வீரா, ஜான் கொக்கன், சிபி, அமீர், பாவனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வலிமை படத்தில் அஜித்தின் லுக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக ‘துணிவு’ படத்தில் மரண மாஸ் கெட்டப்பில் அஜித் என்ட்ரி கொடுத்தார் அஜித். நெகட்டிவ ரோலில், மைக்கேல் ஜாக்சன் டான்ஸ் என இந்தப்படத்தில் அதிரடி காட்டி இருந்தனர். இந்தப்படம் உலகளவில் 300 கோடி வரை செய்தது.

இந்நிலையில் ‘துணிவு’ படத்திற்கு முன்பாகவே ‘ஏகே 62’ பட அறிவிப்பு வெளியானது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக ‘ஏகே 62’ அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து இந்தப்படத்திற்காக விக்கி உருவாக்கிய கதை அஜித்துக்கு திருப்தியளிக்காததால் ‘ஏகே 62’ படத்திலிருந்து விலகினார் விக்னேஷ் சிவன்.

அவரை தொடர்ந்து மகிழ் திருமேனி ‘ஏகே 62’ பட வாய்ப்பை கைப்பற்றியுள்ளார். தடையற தாக்க, தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை இயக்கிய மகிழுடன் அஜித் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஆக்ஷன் ஜானரில் இந்தப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்னமும் வெளியிடாமல் இருக்கின்றனர்.

இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் சால்ட் அன்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில், கொஞ்சம் தாடியுடன் ஸ்டைலிஷ் லுக்கில் அஜித் இருக்கிறார். மேலும் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்காவுடன் படு மாடர்னாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதுதான் அஜித்தின் ‘ஏகே 62’ பட லுக்காக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இந்தப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க அருண் விஜய், அருள்நிதியிடம் அல்லது ஆர்யா நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஏகே 62 படத்தின் டைட்டில் டெவில் அல்லது டார்க் டெவில் என்று வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் துணிவு படத்தில் அஜித்தின் கதாபாத்திரமான டார்க் டெவில் என்பதை இப்படத்தின் டைட்டிலாக வைக்கிறார்கள். இதனால் துணிவு மற்றும் ஏகே 62 படத்திற்கு ஏதாவது கனெக்ட் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது பயம் அறியான் என்ற டைட்டிலை மகிழ்திருமேனி மற்றும் அஜித்திடம் ஒகே வங்கியுள்ளாரம் இந்த செய்தி தற்போது செம்ம வைரலாகி வருகிறது

அஜித் மற்றும் தயாரிப்பாளர்கள் ‘AK 62’ என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்பவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ தலைப்புடன் வெளியிட காத்திருக்கிறார்கள். AK 62, நாம் அனைவரும் அறிந்தபடி, விக்னேஷ் சிவனுடன் தொடர்புடையது, இப்போது அவர் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதால், படத்தின் சரியான தலைப்புடன் வெளியீட்டு விழா இருக்க வேண்டும் என்று குழு கருதியது.

சமீபத்திய கதைகள்