Thursday, April 18, 2024 10:03 am

கோலிவுட்டில் பற்றி எரியும் AK62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமார் சமீபத்தில் எச்.வினோத் இயக்கிய ‘துணிவு’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்து வெளிநாட்டுக் கரையில் குடும்பத்துடன் குலுங்கிக்கொண்டிருக்கிறார். லண்டனில் இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் தயாரிப்பாளர் லைகா சுபாஸ்கரன் ஆகியோருடன் அவர் வரவிருக்கும் ‘ஏகே 62’ படத்தின் கதை விவாதங்களிலும் அவர் மிகவும் ஈடுபட்டிருந்தார்.


தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது படங்கள் மட்டுமில்லாமல் பட அறிவிப்பையும் வேறலெவலில் கொண்டாடுவார்கள் ரசிகர்கள். இவரின் ‘துணிவு’ படம் அண்மையில் வெளியானது. இந்தப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள ‘ஏகே 62’ பட அறிவிப்பிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியானது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘துணிவு’ படத்தில் போனி கபூர், எச். வினோத், அஜித் மூவரும் இணைந்தனர். இந்தப்படத்தில் மஞ்சு வாரியர் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவர்களுடன் வீரா, ஜான் கொக்கன், சிபி, அமீர், பாவனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வலிமை படத்தில் அஜித்தின் லுக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக ‘துணிவு’ படத்தில் மரண மாஸ் கெட்டப்பில் அஜித் என்ட்ரி கொடுத்தார் அஜித். நெகட்டிவ ரோலில், மைக்கேல் ஜாக்சன் டான்ஸ் என இந்தப்படத்தில் அதிரடி காட்டி இருந்தனர். இந்தப்படம் உலகளவில் 300 கோடி வரை செய்தது.

இந்நிலையில் ‘துணிவு’ படத்திற்கு முன்பாகவே ‘ஏகே 62’ பட அறிவிப்பு வெளியானது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக ‘ஏகே 62’ அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து இந்தப்படத்திற்காக விக்கி உருவாக்கிய கதை அஜித்துக்கு திருப்தியளிக்காததால் ‘ஏகே 62’ படத்திலிருந்து விலகினார் விக்னேஷ் சிவன்.

அவரை தொடர்ந்து மகிழ் திருமேனி ‘ஏகே 62’ பட வாய்ப்பை கைப்பற்றியுள்ளார். தடையற தாக்க, தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை இயக்கிய மகிழுடன் அஜித் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஆக்ஷன் ஜானரில் இந்தப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்னமும் வெளியிடாமல் இருக்கின்றனர்.

இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் சால்ட் அன்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில், கொஞ்சம் தாடியுடன் ஸ்டைலிஷ் லுக்கில் அஜித் இருக்கிறார். மேலும் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்காவுடன் படு மாடர்னாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதுதான் அஜித்தின் ‘ஏகே 62’ பட லுக்காக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இந்தப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க அருண் விஜய், அருள்நிதியிடம் அல்லது ஆர்யா நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அஜித்தின் ‘ஏகே 62’ இந்திய திரைப்பட வர்த்தகத்தில் பெரும் சத்தத்தை ஏற்படுத்தி வருகிறது, வரவிருக்கும் தமிழ் திரைப்படத்தின் குறிச்சொல்லைத் தட்டுகிறது. அனிருத் இசையமைப்பாளராகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆர்யா, அருள்நிதி, காஜல் அகர்வால் போன்ற முக்கிய நட்சத்திரங்களுடன் முக்கிய கதாபாத்திரங்களுக்காக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்