27.8 C
Chennai
Saturday, March 25, 2023

அதிரடியாக அடுத்த படத்துக்கு ரெடியான அண்ணாச்சி.. மீசை, தாடி என மாறிப்போன வைரல் புகைப்படம்

Date:

தொடர்புடைய கதைகள்

‘விடுதலை’ ரிலீஸுக்கு முன்னதாக வெற்றி மாறன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...

வெற்றி மாறன் தனது அடுத்த வெளியீடான 'விடுதலை' படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில்...

தனது அப்பாவை இழந்து தவிக்கும் நிலையில் அஜித்திற்கு லைகா...

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

விஜய் சத்யா நடித்த ரஜினி படத்தின் ட்ரைலர் இதோ...

விஜய் சத்யாவின் ரஜினி படத்தின் டிரைலரை தயாரிப்பாளர்கள் வியாழக்கிழமை வெளியிட்டனர். வெங்கடேஷ்...

பொன்னியின் செல்வனுக்கான விக்ரமின் புதிய லூக் வைரல் !

பொன்னியின் செல்வன் II ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வரும்...

பீட்சா 3 தி மம்மி’ படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

சிவி குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்தின் 'பீட்சா 3...

சரவணா ஸ்டோர்ஸ் என்ற மிகப்பெரும் தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதியான சரவணன் அண்ணாச்சி கடந்த வருடம் தி லெஜெண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஏற்கனவே அவர் தன் கடையின் விளம்பர படங்களில் நடிப்பது ரசிகர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானது. அதில் அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்றால் அவர்கள் சும்மாவா விடுவார்கள்.

அந்த வகையில் தி லெஜெண்ட் திரைப்படம் சோசியல் மீடியாவில் மரணமாக பங்கம் செய்யப்பட்டது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத அண்ணாச்சி அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பேன் என்று கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இதை எதிர்பார்க்காத ரசிகர்கள் அண்ணாச்சியின் அடுத்த அவதாரம் என்னவாக இருக்கும் என்ற விவாதத்திலும் இறங்கினார்கள்.

அதிலும் அண்ணாச்சி சமீபத்தில் காஷ்மீரில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட போது அவர் விஜய்யுடன் நடிக்கிறார் என செய்திகள் வெளிவந்தது. தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய் அதற்காக காஷ்மீரில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதனாலேயே ரசிகர்கள் இந்த இரு சம்பவங்களையும் ஒன்றிணைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

ஆனால் அது எதுவும் உண்மை கிடையாது என்றும் விரைவில் அண்ணாச்சியின் புது பட அறிவிப்பு வெளிவரும் என்றும் திரை வட்டாரங்கள் தெரிவித்தது. அந்த வகையில் தற்போது அன்னாச்சியின் புது கெட்டப் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் அண்ணாச்சி தாடி, மீசை என அடையாளமே தெரியாமல் மாறி இருக்கிறார்.

எப்போதுமே முகம் முழுவதும் முழு மேக்கப்புடன் மீசை இல்லாமல் இருக்கும் அண்ணாச்சி இப்படி ஒரு கெட்டப்பில் இருப்பது பார்ப்பவர்களை கொஞ்சம் பதற தான் வைக்கிறது. மேலும் அவர் அப்படி எந்த கேரக்டரில் தான் அடுத்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் இந்த போட்டோ ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் அவருடைய புது பட அறிவிப்பு இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது. அப்படத்திற்காக தான் அவர் தற்போது தன்னுடைய கெட்டப்பை இப்படி ஸ்டைலாக மாற்றி இருக்கிறாராம். இதன் மூலம் அவர் அடுத்த மரண அடிக்கு தயார் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். ஆனால் ரசிகர்கள் இப்போது இந்த போட்டோவையும் சோசியல் மீடியாவில் கலாய்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். இருப்பினும் அண்ணாச்சியின் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் லெஜண்ட் சரவணன் சமூக வலைத்தளமான ட்விட்டரில் இணைந்தார். சேர்ந்த சில நாட்களிலேயே 119K லைக்குகளைப் பெற்றார். சற்று எதிர்பார்ப்புடன் வெளியாகும் ‘தி லெஜண்ட்’ படத்திற்கு பிறகு இவரின் ஃபாலோயர்ஸ் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது பழையது என்பதற்காக அனிமேஷன் பொம்மை என்று பலர் விமர்சித்தாலும். அண்ணாச்சியின் கூட்டமைப்பை பலரும் படித்துவிட்டு படம் பார்ப்பார்கள் என்று தகவல்.

சமீபத்திய கதைகள்