29.4 C
Chennai
Sunday, March 26, 2023

போடு தகிட தகிட அஜித் 62 அடுத்தடுத்த வந்த தரமான அப்டேட் – ரசிகர்கள் செம குஷி !

Date:

தொடர்புடைய கதைகள்

சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

நாட்டின் மிகப்பெரிய கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா, அதிக ரசிகர்களைக் கொண்டவர். அவர்...

பத்து தல படத்தின் ‘ரவுடி’ வீடியோ பாடல்...

சிலம்பரசன் நடித்த 'பாத்து தலை' படம் மார்ச் 30 ஆம் தேதி...

தனது தந்தை இறந்த துக்கத்தில் அஜித் செய்த அந்த...

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில்...

வரலக்ஷ்மி ஆரவ் நடிக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

அவரது சமீபத்திய குற்ற நாடகம் கொண்டரால் பாவம் வெற்றிக்குப் பிறகு, வரலட்சுமி...

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் போர் காட்சி வீடியோ...

இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து தனுஷ் தனது அடுத்த படத்திற்கு 'கேப்டன்...

‘ஏகே62’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். விக்னேஷ் சிவன் இயக்குனராக சில மாதங்களுக்கு முன்பு இந்த திட்டம் முதலில் அறிவிக்கப்பட்டது, ஆனால் அவர் படைப்பு வேறுபாடுகள் காரணமாக விலகினார் மற்றும் அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி வந்துள்ளார்.

லைக்கா தயாரிக்கும் அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஸ்கிரிப்ட் ரெடியான நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு தனக்கு கதை பிடிக்கவில்லை என அஜித் தெரிவிக்க, அந்த படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து மகிழ் திருமேனிக்கு அஜித் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து தற்பொழுது ஸ்கிரிப் எழுதும் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் மகிழ் திரு மேனி, மேலும் படத்திற்கான ஆர்டிஸ்ட்களை தேர்வு செய்யும் பணிகளையும் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்யின் வில்லன் கதாபத்திரம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது.இதன் பின்பே அருண் விஜய்க்கு பட வாய்ப்புகள் அதிகமானது

அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அருண் விஜயை நடிக்க வைப்பதற்கான முயற்சி செய்துள்ளார் மகிழ் திருமேனி. ஆனால் அருண் விஜய் கைவசம் அதிக படம் இருப்பதாலும், மேலும் தற்பொழுது தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் அருண் விஜய் மீண்டும் வேறு ஒரு ஹீரோ நடிக்கும் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு சற்று தயக்கம் இருந்தது. இருந்தாலும் அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் நடித்த பின்பு தனக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்பு கிடைத்தது என்பதை உணர்ந்து வேண்டாம் என்றும் சொல்ல முடியவில்லை.

மேலும் அடுத்தடுத்து தன்னுடைய படத்தின் கால் சீட் இருப்பதால் அடுத்தடுத்து பிஸியாக இருப்பதால் அஜித் படத்திற்கு கால் சீட் கொடுக்க முடியாது சூழலில் மிக பெரிய தர்ம சங்கடத்தில் இருந்துள்ளார் அருண் விஜய்.இந்நிலையில் அருண் விஜய் மிகப்பெரிய ஒரு இக்கட்டான சூழலில் இருப்பதை அறிந்த அஜித் இயக்குனர் மகில் திருமேனியிடம் நீங்கள் எந்த ஒரு ஆர்ட்டிஸ்ட்டையும் கமிட் செய்வதற்கு முன்பு அவர்களைப் பற்றி முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்.

அவர்கள் கைவசம் எத்தனை படங்கள் இருக்கிறது, அவர்களால் கால் சீட் கொடுக்க முடியுமா என்று தெரிந்து கொண்டு அதன் பின்பு அவர்களிடம் கால் சீட் கொடுங்கள். இதற்கு காரணம் அஜித் படத்தில் நடிக்கிறோம் என்பதற்காக மற்ற படங்களில் ஏற்கனவே கமிட்டாகி இருந்தவர்கள் அந்த பட இயக்குனர் எக்கேடு கெட்டு போனால் நமக்கென்ன என்று இருந்து விலகி அவர்கள் வந்துவிடக்கூடாது என்று அஜித் அட்வைஸ் செய்துள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் AK 62 படத்தில் அஜித் ஒரு செம மாஸ் ஆன வில்லனாக சில காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது நிச்சயம் அது மங்காத்தா கதைகளம் போலவே ஒரு கதாபாத்திரத்தில் தான் அஜீத் நடித்து இருக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தப் படத்தில் அஜித்துக்கு இரண்டு விதமாக வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்செய்தி தற்பொழுது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் இச்செய்தியை பலரும் கொண்டாடியும் வருகின்றனர்.

மகிழ் திருமேனி இப்போது இந்த பாத்திரத்திற்காக ஆர்யாவை அணுகுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், இருவரும் ஏற்கனவே 2014 இல் ‘மீகமன்’ படத்தில் இணைந்துள்ளதால், நேர்மறையான சமிக்ஞை வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் அருள்நிதி ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய கதைகள்