Thursday, March 30, 2023

அஜித் பாணியை பின்பற்றும் தளபதி விஜய்! அதுவும் எந்த விஷயத்தில் தெரியுமா

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் குழுவினர் தற்போது ‘லியோ’ படத்தை தயாரித்து வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் காஷ்மீரில் நிலவும் கடும் குளிருக்கு இடையே படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஷெட்யூல் மார்ச் இறுதி வரை தொடரும், மேலும் படம் அக்டோபர் 19 ஆம் தேதி பிரமாண்டமாக வெளிவர உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனர்கள் நடித்து வரும் இந்த படம் பற்றிய செய்தி தான் இப்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

தற்போது காஷ்மீரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல் கலந்து கொண்ட அந்த ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தும் ஏற்கனவே வைரலாகி வந்தது. அதிலும் விஜய் உட்பட படகுழுவினர் அனைவரும் நெருப்பை மூட்டி குளிர் காய்வது போல் வெளியான போட்டோ பயங்கர ட்ரெண்டானது.

அதைத்தொடர்ந்து தற்போது மற்றொரு போட்டோவும் வெளியாகியுள்ளது. அதிலும் விஜய் அந்த போட்டோவில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பது படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. மேலும் அவருடன் இணைந்து லோகேஷ் கனகராஜ், சஞ்சய் தத் உட்பட பலர் இருக்கின்றனர்.

ஏற்கனவே கடுமையான குளிரில் படக்குழுவினர் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என செய்திகள் வெளிவந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குனர் மிஷ்கினும் அது குறித்து வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த போட்டோவில் விஜய் சற்று உடல் இளைத்தது போன்று காணப்படுகிறார்.

இது படத்திற்கான தோற்றமா அல்லது காஷ்மீர் குளிர் அவரை வாட்டி எடுக்கிறதா என்ற ரீதியிலும் பேச்சுக்கள் கிளப்பியுள்ளது. இருப்பினும் அவருடைய இந்த லுக் செம மாஸாக இருக்கிறது. இதுவே படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டையும் எதிர்பார்க்க வைத்துள்ளது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த போட்டோ சோசியல் மீடியாவை ரணகளப்படுத்திக் கொண்டிருக்கிறது.இதை பார்த்த ரசிகர்கள் அஜித் ஏற்கனவே சால்ட் அண்ட் பேப்பர் மாறி வருடக்கணக்கில் ஆகி விட்டது எனவும் இதுக்கும் நாங்கதான் முன்னோடி எனவும் அஜித் ரசிகர்கள் குறி வருகின்றனர்

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். லியோவில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத்தின் இசை, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு.

சமீபத்திய கதைகள்