28.3 C
Chennai
Wednesday, March 22, 2023

AK 62 படத்தில் அஜித்தை மிரட்ட போகும் முக்கிய பிரபலம் ! இவருதான் மெயின் வில்லனோ

Date:

தொடர்புடைய கதைகள்

விஜய் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை...

தொலைக்காட்சி பிரபலமும், நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா இன்று...

RC15 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்...

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின்...

இயக்குனர் கல்யாண் இயக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களுக்கு பெயர் பெற்ற திரைப்படத்...

சூர்யா 42 படத்தின் டைட்டிலை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

சூர்யா சிறுத்தை சிவாவுடன் தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு...

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ரசிகர்கள் எதிர்பார்த்த ...

ஜனவரியில் வெளியான துணிவு நல்ல வரவேற்பைப் பெற்றதில் இருந்து, அஜித் விடுமுறையில்...

அஜீத் குமாரின் ஏகே 62 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம், ஆனால் தமிழ் நட்சத்திரம் அல்லது லைகா புரொடக்ஷன்ஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு செய்தியும் இல்லை. மார்ச் 6 ஆம் தேதி, AK 62 படப்பிடிப்பிற்குப் பிறகு, தனது உலக பைக் சுற்றுப்பயணத்தை எவ்வாறு புறப்படப் போகிறார் என்பது குறித்து அஜித்குமார் தனது அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் மூலம் அறிவித்தார்.

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தை அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.அதன்படி லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் முதலில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அதனை அடுத்து விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடிக்காததால் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கான அறிவிப்பு இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என்றும் தகவல் கசிந்திருந்தது.

அத்தோடு அஜித்திற்கு மகிழ்திருமேனி இரண்டு கதைகள் சொன்னதாகவும் இந்த இரண்டு கதையில் எந்தக் கதையை அஜித் தேர்வு செய்வார் என்ற கருத்தும் பரவி வந்தது. அதாவது மகிழ்திருமேனி அஜித்திற்கு கதை சொல்ல முதல் விஜய்க்கு ஒரு கதை சொன்னாராம். அந்தக் கதை விஜய் தரப்பும் ஓகே சொல்லியிருந்தாராம்.

அதே போல ஆர்யாவிடமும் ஒரு கதை சொல்லியிருந்தாராம். ஆர்யாவுக்கும் அந்தக் கதை பிடித்திருந்ததாம். பின்னர் இந்த இரண்டு கதைகளையும் விஜய் மற்றும் ஆர்யா தரப்பினரின் சம்மதத்துடன் தான் அஜித்திடம் சொன்னாராம். அதில் ஆர்யாவுக்கு சொன்ன கதை லைகா நிறுவன சுபாஸ்கரனுக்கு பிடித்துப் போனதால் ஆர்யாவுக்கு சொன்ன கதையில் தான் அஜித் நடிக்கவுள்ளாராம்.

மேலும் இப்படத்திற்கான ஏற்பாடுகள் யாவும் நடைபெற்று வருகின்றதாம். இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் அருண்விஜய் மற்றும் அருள்நிதி ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஏகே 62 படத்தில் வில்லனாக நடிக்க ஆர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இது ஒரு புறம் இருக்க படக்குழுவுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளாராம் அஜித். ஏகே 62 படத்தில் நடிக்கும் நடிகர்களைத் தேர்வு செய்ய முதல் அவர்கள்வேற ஏதாவது படத்தில் கமிட்டாகி நடித்து வருகின்றார்களா என்பதைத் தெரிந்து கொண்டு அவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியுள்ளாராம். இதனால் படக்குழுவும் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனராம் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

AK 62 ஐப் பொறுத்தவரை, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார் மற்றும் துனிவு ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா திட்டத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.

சமீபத்திய கதைகள்