Friday, April 26, 2024 5:35 pm

அஜித்தின் அடுத்தகட்ட முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுரேஷ் சந்திரா

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

AK62 படத்தின் தலைப்பு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என ஒரு புதிய அறிக்கையின்படி, முதலில், அஜித் தனது பைக்கில் உலக சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டிருந்ததால் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது.ஆனால் நடிகர் தனது திட்டத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது. தற்போது அஜீத் துணிவு படத்தின் வெற்றியை ரசித்து வருகிறார்.

நடிகர் அஜித்குமார் வருடத்திற்கு ஒரு தரமான படத்தைக் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியானது. இந்த படம் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரு படங்களை இயக்கிய ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்தது.

துணிவு படம் பேங்க் கொள்ளை மோசடி போன்றவற்றை மையமாக வைத்து உருவாகி வெளிவந்தது அதனால் படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. இதைத்தொடர்ந்து அஜித் அவரது அடுத்த படமான ஏ கே 62 படத்திற்காக முன்னதாக இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இடம் ஒரு ஒன் லைன் ஸ்டோரியை கேட்டுவிட்டு ஓகே செய்துள்ளார்.

இந்த படத்தை தயாரிக்க இருந்த லைகா ப்ரொடக்ஷன் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் தற்போது விக்னேஷ் சிவன் சொன்ன முழு கதை அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்தி அளிக்காததால் இயக்குனரை மாற்றி விட்டனர் அதன்படி அஜித்தின் அடுத்த படத்தை மகிழ்த்திருமேனி இயக்க உள்ளார்.

இவர் கூறிய கதை லைகா நிறுவனத்திற்கு பிடித்துப் போகவே கதையை விரிவுபடுத்த சொல்லி உள்ளனர். இந்த படத்தின் முழு கதை திரைக்கதை என எல்லாம் தயாரான பின் அஜித் கதையை கேட்டுவிட்டு பின்பு அறிவிப்பை வெளியிட உள்ளது தயாரிப்பு நிறுவனம். மேலும் அஜித் தனக்காக அவசர அவசரமாக கதையை தயார் செய்ய வேண்டாம்,

பொறுமையாக கதையை தயார் செய்து முடித்துவிட்டு பின்பு படப்பிடிப்பிற்கு செல்லலாம் எனவும் கூறியுள்ளாராம். இந்த படத்தின் கதையை கேட்பதற்காக அஜித் உலகம் முழுவதும் பைக் ரைடு செல்ல வேண்டாம் என தனது கனவை தள்ளி வைத்துள்ளாராம்.

இந்நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது.

ஏகே 62 தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இந்த மாதம் முதல் இந்த திட்டம் தொடங்கும் என தெரிகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்