Tuesday, April 16, 2024 10:56 am

AK62 படத்தின் வெளியான புதிய அப்டேட் !! ஸ்டைலான லுக்கில் அஜித் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும் இந்த செய்திக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மகிழ் திருமேனி படத்திலும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், துனிவு ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்றே இந்நிலையில் அஜித்தின் ஏகே 62 திரைப்படம் குறித்த அப்டேட் இன்னும் வெளியாகவில்லை.லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள இந்தப் படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.

அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில், நடிகர் ஏகே 62 படத்திற்காக தனது நீண்டநாள் கனவை ஒத்தி வைத்துவிட்டு காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. ரசிகர்களின் வரவேற்போடு 300 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டியது. இதனைத் தொடர்ந்து அஜித் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார். லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார். ஆனால், தற்போது அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

அஜித் – மகிழ் திருமேனி இணையும் ஏகே 62 அப்டேட் டைட்டில் ப்ரோமோவுடன் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், ஏகே 62க்கு முன்பாகவே ரஜினி நடிப்பில் லைகா தயாரிக்கும் தலைவர் 170 அப்டேட் வெளியாகிவிட்டது. ஆனால், ஏகே 62 அப்டேட் எப்போது வெளியாகும் என்ற அப்டேட் கூட இன்னும் தெரியவில்லை. இதனிடையே அஜித்தும் தற்போது பைக் ட்ரிப் செல்ல ரெடியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸிங், பைக் ரேஸிங், ட்ரோன் மேக்கிங், துப்பாக்கிச் சுடுதல் என சகலகலா வல்லவனாக வலம் வரும் அஜித், கடந்த சில வருடங்களாக பைக் டூரில் ஆர்வம் காட்டி வருகிறார். துணிவு படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் போது காஷ்மீர், லடாக் பகுதிகளில் பைக் ட்ரிப் சென்றுவந்தார். அப்போது அவருடன் மஞ்சு வாரியரும் பைக் டூர் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு விரைவில் உலகம் முழுவதும் பைக் டூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக அஜித் தனது மேனேஜர் மூலம் தெரிவித்திருந்தார். அதன்படி, ஏகே 62 ரிலீஸ் ஆனதும் உலகம் முழுவதும் பைக்கில் டூர் செல்ல அஜித் திட்டமிட்டிருந்தாராம். அதனால், அவர் ஏகே 62க்குப் பின்னர் ஓராண்டு எந்தப் படத்திலும் கமிட் ஆகப்போறதில்லை என சொல்லப்பட்டது. இந்நிலையில், ஏகே 62 அப்டேட்டுக்காக வெயிட்டிங்கில் இருக்கும் அஜித், அதன் பின்னரே பைக் ட்ரிப் பற்றி முடிவெடுக்கவுள்ளாராம்.

ஏகே 62 ஸ்பை திரில்லர் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. கதை, திரைக்கதையை மகிழ் திருமேனி ரெடி செய்துவிட்டாலும், லைகா தான் தனது இறுதி முடிவை அறிவிக்காமல் உள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் அருண் விஜய், அதர்வா, பிக் பாஸ் கவின், ஜான் கெக்கென் ஆகியோரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ஏகே 62 ஒளிப்பதிவாளராக நீரவ்ஷாவும், இசையமைப்பாளராக அனிருத்தும் கமிட் ஆகியுள்ளாதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் ஏகே 62 குறித்த அப்டேட் இன்னும் வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

ஆகவே வரும் வியாழக்கிழமை அஜித் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது .இப்படத்திற்காக அஜித் புதிய லுக்கிற்காக, தனது உடல் எடையில் 25 கிலோ குறையவுள்ளார் எனவும் ஸ்டைலான அஜித்தை இதில் பார்க்கப்போகிறோம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வெளிப்படையாக, அஜித் மற்றும் தயாரிப்பாளர்கள் ‘ஏகே 62’ என்ற தலைப்பில் அறிவிப்பை வெளியிட விரும்பவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ தலைப்புடன் வெளியிட காத்திருக்கிறார்கள். AK 62, நாம் அனைவரும் அறிந்தபடி, விக்னேஷ் சிவனுடன் தொடர்புடையது, இப்போது அவர் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதால், படத்தின் சரியான தலைப்புடன் வெளியீட்டு விழா இருக்க வேண்டும் என்று குழு கருதியது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்