Friday, March 31, 2023

அஜித் எடுத்த அதிரடி முடிவு ! கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அஜித் புதிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் ‘துணிவு’ ஆகிய மூன்று படங்களில் தொடர்ந்து எச்.வினோத்துடன் அஜீத் இணைந்து நடித்தார், இவை அனைத்தும் போனி கபூர் தயாரித்தவை.
மூன்றும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றாலும் ‘துனிவு’ அஜித்தின் தொழில் வாழ்க்கையின் சிறந்த படமாக அமைந்தது, மேலும் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியான உடனேயே தனது அடுத்த ‘ஏகே 62’ தொடங்க விரும்பினார். ஆனால் ஆக்கப்பூர்வமான கருத்து வேறுபாடுகள் காரணமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு நீக்கப்பட்டு மகிழ் திருமேனி களமிறங்கியுள்ளார்.

அஜித்தின் ஏகே 62 படத்தை மகிழ்திருமேனி தான் இயக்கப் போகிறார் என்பது உறுதியானாலும் அதற்கான அறிவிப்பு மட்டும் இழுத்தடித்து வருகிறது. இப்போது மகிழ்திருமேனி தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம். இதற்காக 5 ஸ்டார் ஹோட்டலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் படக்குழு மிகப்பெரிய குழப்பத்தில் இருந்து வந்தனர். ஏனென்றால் அஜித் ஒரு படம் முடிந்த உடனே சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதுமட்டுமின்றி ஏகே 62 படத்தை முடித்த கையோடு பைக்கில் வேர்ல்ட் டூர் செல்ல உள்ளார்.

இதனால் படக்குழு குறித்த நேரத்தில் எப்படி படத்தை எடுத்து முடிப்பது என்ற யோசனையில் இருந்து வந்தனர். ஆனால் அஜித் படக்குழுவுக்கு ஒரு குட் நியூஸ் சொல்லி உள்ளார். அதாவது படத்தை நன்றாக எடுங்கள் நான் பிறகு வேர்ல்ட் டூர் செல்கிறேன் அதனால் இப்போது பயப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனால் மகிழ்திருமேனி மிகுந்த மகிழ்ச்சி உடன் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டாராம். அதுமட்டுமின்றி லோகேஷ், விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த பயத்தினால் அஜித் ஒரு முடிவு எடுத்துள்ளார்.

அதாவது லியோ படம் போலவே ஏகே 62 படத்திற்கும் டைட்டில் வீடியோவை வெளியிடலாம் என்று யோசனை கூறியுள்ளாராம். இதற்கான ஏற்பாடை தற்போது மகிழ்திருமேனி செய்து வருகிறாராம். மேலும் இன்னும் தாமதிக்காமல் விரைவில் படத்தின் அப்டேட் வெளியிடலாம் என்றும் அஜித் கூறியுள்ளாராம்.

ஆகையால் இந்த வாரத்திற்குள் ஏகே 62 படத்தின் டைட்டில் உடன் அறிவிப்பு வெளியாக உள்ளது. மேலும் அஜித், மகிழ்திருமேனிக்காக வேர்ல்ட் டூரை தள்ளி போட்டு உள்ளதால் அவருக்கு தரமான வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இயக்குனர் செயல்பட்டு வருகிறார். கண்டிப்பாக வெறித்தனமாக ஏகே 62 அப்டேட் வெளியாக இருக்கிறது.

எனவே இதுவரை இல்லாத வகையில் ‘ஏகே 62’ படத்தின் தலைப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர். விஜய்யின் ‘லியோ’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவான ‘ப்ளடி ஸ்வீட்’ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், அதேபோன்ற வீடியோவும் வேலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மகிழ் திருமேனி மற்றும் அவரது உதவி இயக்குனர்கள் இதற்காக கடுமையாக உழைத்து வருவதாகவும், அடுத்த வாரத்தில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே இந்த வார இறுதியில் கண்டிப்பாக 62 படத்தின் அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது

சமீபத்திய கதைகள்