Saturday, April 1, 2023

நோ மீன்ஸ் நோ !! அஜித் எடுத்த அதிரடி முடிவு !! மிரளும் திரையுலகம்

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பதில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனி AK62 படத்தை இயக்கவுள்ளார், இந்த திட்டத்தின் பூஜை நேற்று லைகா புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் குறைந்த அளவிலான பங்கேற்பாளர்களுடன் நடந்தது. ஏகே62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வெளியிடப்படாத காரணங்களால் படத்தயாரிப்பாளர் திட்டத்தில் இருந்து விலகினார்.

நடிகர் ரஜினிகாந்த் போன்று நடிகர் அஜித்குமாரும் தீவிர ஆன்மீக பற்று கொண்டவர், அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய குருவாக எப்படி ராகவேந்திராவை ஏற்றுக் கொண்டாரோ, அதே போன்று நடிகர் அஜித்குமார் தன்னுடைய குருவாக சாய்பாபாவை ஏற்றுக் கொண்டவர். ரஜினி அடிக்கடி ராகவேந்திராவை வழிபடுவது போன்று நடிகர் அஜித் ஒவ்வொரு வியாழக்கிழமையும் தவறாமல் சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நடிகர் அஜித்குமார் தன்னுடை பிறந்தநாளான மே 1-ம் தேதி புனேயில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் சுவாமி தரிசனம் செய்தும் வந்துள்ளார், அந்த அளவுக்கு சாய்பாபா மீது தீவிர பக்தி கொண்டவர் அஜித் குமார். மேலும் அஜித் தன்னுடைய ஒவ்வொரு படம் தொடங்குவதற்கு முன்பு திருப்பதி வெங்கடாஜலபதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அஜித் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி ஷாலினி கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் கூட இருவருமே அவரவர் மதத்தை பின்பற்றி இதுவரை வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இருவருமே எந்த ஒரு மதத்திற்கும் மாறவில்லை. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய நூறாவது படமாக ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளின் கதையை மையப்படுத்தி ஸ்ரீ ராகவேந்திராவாக நடித்தார்.

இதற்கு முக்கிய காரணம் ரஜினிகாந்த் ஸ்ரீராகவேந்திரா மீது கொண்ட தீவிர பக்தி தான். அந்த வகையில் தற்பொழுது தயாரிப்பாளர் தாணு பல படங்களை தயாரிப்பதற்கு அடுத்தடுத்து பல நடிகர்களை ஒப்பந்தம் செய்துள்ளார், அதில் வாடிவாசல் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய படம் என்று பல படங்களை தயாரிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார், ஆனால் அந்த படங்கள் அனைத்தும் அறிவிப்போடு நின்று கொண்டிருக்கிறது. அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.

இந்த நிலையில் தயாரிப்பாளர் தானு தற்பொழுது ஒரு பேன் இந்தியா படமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் புதிய படத்தை தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு வட இந்தியாவைச் சார்ந்த ஒரு முக்கிய நபர் பைனான்ஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட இருக்கும் இந்த புதிய படம், இதற்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன். RRR போன்று மிக பிரம்மாண்டமாக எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாய்பாபா வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட இந்தப் படத்தில் நடிப்பதற்காக சாய்பாபாவின் தீவிர பக்தராக இருக்கும் நடிகர் அஜித்குமாரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தயாரிப்பாளர் தானு சாய்பாபா வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு தயாரிக்க இருக்கும் பேன் இந்தியா படத்திற்கு பைனான்ஸ் செய்ய இருக்கும் அந்த வட இந்தியாவைச் சார்ந்தவர்கள் பாஜக பின்புலம் கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் தீவிர ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட அஜித்தை சாய்பாபா வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வைப்பதற்காக நடை பெற்ற பேச்சுவார்த்தையில், அஜித் தரப்பில் இருந்து எந்த ஒரு உறுதியான தகவலும் தெரியப்படுத்தவில்லை என்பதால், அஜித் இந்த படத்தில் நடிக்க மறுக்கும் பட்சத்தில், பாலிவுட் நடிகர் ஒருவர் நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் நடிகர்கள் மற்றும் வகை பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மார்ச் மாதத்தில் திட்டத்தின் தலைப்பு அறிவிப்புடன் அவை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ் திருமேனி கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் ‘கலக தலைவன்’. தீய கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போரிடும் ஒரு விழிப்புணர்வின் பயணத்தைத் தொடரும் திரில்லர்.

சமீபத்திய கதைகள்