Saturday, April 1, 2023

துணிவு படத்தில் வில்லனாக கலக்கிய “ஜான் கொக்கன்” வாங்கிய சம்பளம் தொகை எவ்வளவு தெரியுமா ?

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பேங்க்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக காட்டியது. அதனால் என்னவோ இந்த படம் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் கைதட்டல் வாங்கி அதிக நாட்கள் ஓடியது.

அதுமட்டுமல்லாமல் பட்டி தொட்டி எங்கும் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடியது. இதுவரை மட்டுமே துணிவு படம் சுமார் 220 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் செய்துள்ளது அதனை தொடர்ந்து netflix OTT தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று அசத்தி வருகிறது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து..

தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி உள்ளாராம். வெகு விரைவிலேயே ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறதாம். அதற்கு முன்பாக நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணி போய்க்கொண்டிருக்கிறது.

குறிப்பாக அஜித்துக்கு ஜோடியை தேர்வு செய்யப் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது ஏற்கனவே த்ரிஷா, நயன்தாரா என பல பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வாலை நடிக்க வைக்க படக்குழு திட்டம் போட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி ஏகே 62 திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளி வருகின்றன.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து மக்கள் மனதில் கைத்தட்டல் வாங்கிய ஜான் கொக்கேன். துணிவு படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கி நடித்தார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி துணிவு வில்லனாக நடிக்க ஜான் கோக்கேன் சுமார் ஒரு கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்திய கதைகள்