32 C
Chennai
Saturday, March 25, 2023

இந்திய அளவில் புதிய சாதனை படைத்த அஜித்தின் துணிவு வெளியான ரிப்போர்ட் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

அரசியல் பிரவேசம் எடுக்கும் வாணி போஜன் !

செங்கலம் ஒரு அரசியல் வலைத் தொடராகும், இதில் வாணி போஜன் மற்றும்...

யார் இந்த பெசன்ட் ரவி ? இறுதி வரை...

சூப்பர் ஸ்டார் அஜித் குமாரின் தந்தை பி சுப்பிரமணியம் சென்னையில் வெள்ளிக்கிழமை...

துல்கர் சல்மான் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

துல்கர் சல்மான் தனது 28 வயதில் திரைப்படத்தில் அறிமுகமானார், பல நட்சத்திர...

‘விடுதலை’ ரிலீஸுக்கு முன்னதாக வெற்றி மாறன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...

வெற்றி மாறன் தனது அடுத்த வெளியீடான 'விடுதலை' படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில்...

தனது அப்பாவை இழந்து தவிக்கும் நிலையில் அஜித்திற்கு லைகா...

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பாக்ஸ் ஆபிஸில் விஜய் மற்றும் அஜித் மோதினர். இரண்டு உச்ச நடிகர்களின் மோதல் ரசிகர்களால் அவர்களின் இரு படங்களுக்கிடையில் ஒரு நிலையான ஒப்பீட்டிற்கு வழிவகுக்கிறது. இருப்பினும், இரண்டு படங்களும் இன்று வெற்றிகரமாக 50 நாட்களை திரையரங்குகளில் வெற்றிகரமாக முடித்துள்ளன. இரண்டு படங்களும் ஒரு அற்புதமான வேலையைச் செய்திருந்தாலும், தங்களுக்குப் பிடித்த நட்சத்திரத்தை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்த்து ரசிகர்களை மகிழ்வித்தது. இன்று படங்கள் ஒரு மைல்கல்லைக் கடக்கும்போது விஜய் மற்றும் அஜித் நடித்த இரண்டு படங்களும் BO இல் எப்படி இருந்தன என்பதை டிகோட் செய்வோம். OTT வெளியீடு, பார்வையாளர்களிடமிருந்து வரவேற்பு மற்றும் பல

தமிழ் சினிமாவை இப்போது கட்டிப்போட்டு வைத்துள்ளவர்கள் விஜய் மற்றும் அஜித். இந்த இரு நடிகர்களுக்கும் தான் தற்போது அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களது படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஆர்ப்பரிக்கின்றனர். இவர்கள் இருவரும் இப்போது 50 படங்களை தாண்டி நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய அளவில் அஜித் இப்போது சாதனை படைத்துள்ளனர். அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் நேருக்கு நேராக மோதிக்கொண்டது. இந்த இரு படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த படங்கள் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில் வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாகி இருந்தது. அந்த வகையில் வாரிசு படம் அமேசான் ப்ரைம் ஒடிடியில் வெளியானது. அதேபோல் துணிவு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. பொதுவாக ஒடிடியில் படங்கள் வெளியானால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் வராது.

அதாவது வீட்டில் இருந்தே படத்தை பார்த்து விடுவார்கள். ஆனால் துணிவு படம் ஓடிடியில் வெளியானாலும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. படம் வெளியாகி 50 நாட்களை தாண்டியும் ரசிகர்கள் இந்த படங்களை கொண்டாடுவது மிகப் பெரிய ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

இதே போல் தான் கொரோனா பரவலுக்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை ஒரு கோடி பேர் பார்த்துள்ளனர். இப்போது மாஸ்டர் படத்தின் ரெக்கார்டை துணிவு படம் முறியடித்துள்ளது. அதாவது இந்த படம் ஒரு கோடியே 10 லட்சம் பேர் இப்போது வரை பார்த்து உள்ளனர்.

இப்போதும் துணிவு படத்தை திரையரங்குகளில் பார்த்து வருவதால் இன்னும் சில நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்க கூடும். இதுபோன்று எந்த ஹீரோக்களுக்கும் இந்தியாவில் நடக்காது என்றும் தமிழ் சினிமாவில் அஜித்துக்கு சாதனை படைத்து வருவதாக பிரபலங்கள் கூறி வருகிறார்கள்.


உலக அளவில் 330 கோடி வசூலை அஜித்தின் துணிவு திரைப்படம் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “துணிவு” இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியார், ஜான் கோக்கன், ஜி. எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 330 கோடி வசூல் செய்துள்ளதாம். அஜித்தின் சினிமா கேரியரில் அதிகம் வசூல் செய்த திரைப்படமும் இந்த திரைப்படம் தான் என்ற சாதனையும் படைத்துள்ளது. மேலும், துணிவு திரைப்படம் கடந்த 8-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

`துணிவு` எச்.வினோத் எழுதி இயக்கிய ஒரு அதிரடி திருட்டுத் திரைப்படம். இதில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் பவானி ரெட்டி ஆகியோருடன் ஜான் கோக்கன், மமதி சாரி, அஜய், வீரா மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்திய கதைகள்