Friday, March 31, 2023

அதிரடியாக Ak 62 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் ! வைரலாகும் தகவல்

தொடர்புடைய கதைகள்

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

தீரா காதல் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

செவ்வாயன்று தீரா காதல் படத்தின் தயாரிப்பாளர்கள் உசுரன்கூடில் என்ற முதல் தனிப்பாடலை...

மார்க் ஆண்டனி படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஷால்-ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் இறுதிக்கட்ட...

மாஸ் ஹீரோவின் புதிய படம் ‘ஏகே62’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். விக்னேஷ் சிவன் இயக்குனராக சில மாதங்களுக்கு முன்பு இந்த திட்டம் முதலில் அறிவிக்கப்பட்டது, ஆனால் அவர் படைப்பு வேறுபாடுகள் காரணமாக விலகினார் மற்றும் அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி வந்துள்ளார்.

அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை பற்றிய சலசலப்பு தான் இப்போது அதிகமாகி வருகிறது. சோசியல் மீடியாவை திறந்தாலே இந்த படத்தின் அப்டேட் எப்போது என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. ஆனாலும் அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கதாநாயகி வாய்ப்புக்காக இரு நடிகைகள் போட்டி போட்டு வருகிறார்களாம்.

அந்த வகையில் இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க முதலில் தேர்வானது திரிஷா தான். ஆனால் அப்போது அவர் லியோ திரைப்படத்தில் கமிட் ஆகி இருந்த காரணத்தினால் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டார். ஏனென்றால் இரு படங்களும் ஒரே நேரத்தில் ஆரம்பித்தால் கால்ஷூட் பிரச்சனை வரும் என்பதுதான் முக்கிய காரணம். இதற்கு அடுத்தபடியாக வேறு ஒரு காரணமும் இருக்கிறது.

அதாவது விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்குகிறார் என்ற காரணத்தாலும் திரிஷா இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் நயன்தாராவுடன் அவருக்கு இருக்கும் தொழில் போட்டி ஊரறிந்தது தான். இதையெல்லாம் யோசித்து தான் திரிஷா விஜய் படத்தில் நடித்த சம்மதித்தார். ஆனால் இப்போது அவர் மீண்டும் ஏகே 62 வாய்ப்புக்காக வலை வீசி இருக்கிறாராம்.

ஏனென்றால் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்திற்குள் முடிவடைந்து விடும். அதில் திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் முன்கூட்டியே முடிக்கப்பட இருக்கிறதாம். அந்த வகையில் திரிஷா தற்போது லைக்கா நிறுவனத்திடம் இது குறித்து பேசி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இயக்குனர் மாறிவிட்டதால் இந்த படத்தில் நடிக்க எந்த தடையும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க ஸ்ருதிஹாசன் அஜித்துடன் ஜோடி போட ரொம்பவே ஆர்வம் காட்டி வருகிறாராம். ஏற்கனவே வேதாளம் திரைப்படத்தில் இவர் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து சில காலம் வாய்ப்பில்லாமல் இருந்த இவர் சமீபத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணா உடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு இப்போது அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கிறதாம்.

அந்த வகையில் அவர் கோலிவுட்டில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார். அதனாலேயே சில சிபாரிசுகளை வைத்து இந்த படத்தில் நடிக்க தூது விட்டுக் கொண்டிருக்கிறாராம். இப்படி அஜித்துடன் ஜோடி போட இந்த இரண்டு நடிகைகளும் போட்டி போட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த ரேஸில் சுருதிக்கு அதிர்ஷ்டம் அடிக்க அதிக வாய்ப்புள்ளதாம்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக திருமணம் செய்து கொண்ட காஜல், தற்போது ஒரு வயதாகும் தனது மகனைப் பெற்றெடுத்தார். அதன் பிறகு மீண்டும் மீண்டும் வந்த அவர் தற்போது கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கருங்காப்பியம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். ‘ஏகே 62’ படத்தில் அவர் ஈடுபடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மாதத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காத்திருங்கள்.

சமீபத்திய கதைகள்