29.4 C
Chennai
Sunday, March 26, 2023

மீண்டும் தெலுங்கு இயக்குனரை டிக் செய்த தளபதி விஜய் ! பீதியில் தளபதி ரசிகர்கள் !!

Date:

தொடர்புடைய கதைகள்

‘லியோ’ படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் நீண்ட ஷெட்யூல்...

சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

நாட்டின் மிகப்பெரிய கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா, அதிக ரசிகர்களைக் கொண்டவர். அவர்...

பத்து தல படத்தின் ‘ரவுடி’ வீடியோ பாடல்...

சிலம்பரசன் நடித்த 'பாத்து தலை' படம் மார்ச் 30 ஆம் தேதி...

தனது தந்தை இறந்த துக்கத்தில் அஜித் செய்த அந்த...

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில்...

வரலக்ஷ்மி ஆரவ் நடிக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

அவரது சமீபத்திய குற்ற நாடகம் கொண்டரால் பாவம் வெற்றிக்குப் பிறகு, வரலட்சுமி...

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தானா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெய சுதா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பார்த்த பல ரசிகர்கள் இந்த படம் சீரியல் போல உள்ளதாக கூறி வந்தனர் அப்படி இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது அதாவது நடிகர் விஜய் அவர்கள் லியோ திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தெலுங்கு திரைப்பட இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தேவர் கொண்ட நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்திப் ரெட்டி. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஹிந்தியில் கபீர்சிங் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து இரண்டு படங்களை ஹிட் படங்களாக கொடுத்த சந்தீப் ரெட்டிக்கு விஜய் அவர்கள் தற்போது அடுத்த வாய்ப்பை கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இருந்தாலும் விஜய் தெலுங்கு திரைப்பட இயக்குனரை நம்பி மறுபடியும் ஏமாறப் போகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் சிலர் பட்டது போதாது என மறுபடியும் தெலுங்கு திரைப்பட இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கிறீர்கள் என்று கூறி வருகிறார்கள். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய கதைகள்