Saturday, April 1, 2023

“சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்” படத்தின் முழு விமர்சனம் இதோ !!

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

டெக்னாலஜி வாயிலாக போனில் உருவாகும் பெண் காதலில் விழுந்து, அதை ஏற்க மறுக்கும் நபரை பழிவாங்கும் திரைப்படம் தான் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்”.அறிமுக டைரக்டரான விக்னேஷ் ஷா பி.என் எழுதி, இயக்கியிருக்கும் படம் தான் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்”. இப்படத்தில் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடித்து இருக்கின்றனர். சிறிய இடைவேளைக்கு பின் பாடகர் மனோ முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அதோடு இவர்களுடன் மா.கா.பா.ஆனந்த், பக்ஸ், ஷாரா, மொட்டை ராஜேந்திரன், கல்கிராஜா, கே.பி.ஒய்.பாலா உட்பட பலர் நடித்து உள்ளனர்.

சிங்கிள் பசங்க காதல் செய்வதற்காக பிரத்யேகமாக போனில் மட்டும் பேசக்கூடிய ஒரு பெண்னை விஞ்ஞான வளர்ச்சியில் பல கோடி ரூபாய் செலவில் ஷாரா கண்டுபிடிக்கிறார். இதன் கண்டுபிடிப்பிற்காக பக்ஸ், பல கோடி ரூபாயை ஷாராவுக்காக செலவுசெய்கிறார். போனில் பேசுவதற்காகவும் சிங்கிள் பசங்களின் தேவைகளை தீர்த்துவைப்பதற்காகவும் பல நாட்கள் செலவு செய்து பின் சிம்ரன் (மேகா ஆகாஷ்) என்ற ஒரு பெண்ணை போனில் வடிவமைக்கிறார். இதையடுத்து ஷாரா வடிவமைத்த சிம்ரன் போனை வெளியில் கொண்டு செல்கிறார். அப்போது இரண்டு பேர் அந்த போனை திருடிசென்று விடுகின்றனர்.

அதன்பின் அந்த போனை ஒரு விலைக்கு கடையில் விற்று விடுகின்றனர். இதற்கிடையில் இன்ஜினியரிங் படித்து விட்டு டெலிவரி பாய்யாக வேலை பார்த்து வருகிறார் சிவா. இவர் அவ்வப்போது நண்பர் மா.கா.பா.ஆனந்த்திடம் தேவைகளுக்காக பணம் பெறுகிறார். ஒருநாள் இவரது மொபைல் போன் உடைந்து போக அவரிடம் பணம் பெற்றுக்கொண்டு மொபைல் வாங்க செல்கிறார் சிவா. குறைவான விலையில் சிவா போன் கேக்க, இவரிடம் அந்த சிம்ரன் போனை கடைக்காரர் விற்றுவிடுகிறார். இதற்கிடையில் தொலைந்த சிம்ரன் போனை ஷாராவும், பக்ஸ் குழுவும் தேடுகின்றனர். மற்றொருபுறம் சிவாவின் தேவைகளை சிம்ரன் பூர்த்திசெய்து வருகிறார்.

ஒருக்கட்டத்தில் சிம்ரன் அவரை காதலிக்க தொடங்கிவிடுகிறார். இதை ஏற்காத சிவா வெறும் போன் வாயிலாக இருக்கும் உன்னால் உணர்வுகளை மட்டுமே கொடுக்க முடியும் என்னுடன் வாழ முடியாது என சொல்லி சிம்ரனை காதலிக்க மறுக்கிறார். அதன்பின் சிவா விரும்பும் பெண்ணையும் டெக்னாலஜியை வைத்து சிம்ரன் சேர்த்து வைக்கிறார். அப்பெண்னை காதலிக்க துவங்கிய பின் சிம்ரனிடம் நெருக்கம் காட்டுவதை சிவா குறைக்கிறார். இதன் காரணமாக கோபமடையும் சிம்ரன், சிவாவுக்கு எதிராக செயல்படுகிறார். இதனால் பல்வேறு பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும் சிவா இதிலிருந்து எப்படி மீள்கிறார்..? தொலைந்த சிம்ரன் போனை கண்டுபிடித்தார்களா..? இறுதியில் என்ன ஆனது..? என்பதே படத்தின் மீதிக்கதை ஆகும்.

சமீபத்திய கதைகள்