Thursday, March 30, 2023

வாரிசு படத்திற்காக ஷாம் வாங்கிய சம்பள தொகை எவ்வளவு தெரியுமா ?

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சியுடன் இணைந்து வாரிசு படத்தின் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.

அதனை அடுத்து நடிகர் விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்தப்படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. லியோ திரைப்படத்திற்கு முன்பாக நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து நடிகர் ஷாம் அவர்கள் நடித்திருப்பார். இந்த நிலையில் நடிகர் ஷாம் வாரிசு படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

சினிமாவில் சாக்லேட் பாயாக இருந்து முன்னணி நடிகராகவும் திகழ்ந்து வந்தவர் நடிகர் சாம். இவர் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஒரு ரவுண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் விஜய் அஜித்திற்கு நிகராக இவரும் உலா வருவார் என்று எதிர்பார்த்த நேரத்தில் சரியான பட வாய்ப்பு அமையாததால் இவருடைய சினிமா வாழ்க்கை அப்படியே சருக்கலில் ஆரம்பித்தது.

அதன் பிறகு தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் அதன் பிறகு தமிழில் சில படங்களில் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து தற்போது வாரிசு திரைப்படத்தில் விஜயின் அண்ணனாக நடித்து பிரபலமாகியுள்ளார். இதனை தொடர்ந்து வாரிசு படத்தில் நடித்ததற்காக நடிகர் ஷாம் அவர்கள் ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வாரிசு திரைப்படத்திற்கு முன்பு விஜயுடன் குஷி திரைப்படத்தில் விஜயின் நண்பராக நடித்துள்ளார் நடிகர் ஷாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அதே நட்பு தற்போது வாரிசு படத்தில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்திய கதைகள்