Friday, April 26, 2024 9:04 am

அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் சர்ப்ரைஸ் லேட்டஸ்ட் அப்டேட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும் இந்த செய்திக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மகிழ் திருமேனி படத்திலும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், துனிவு ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அஜித், மகிழ்திருமேனி கூட்டணியில் ஏகே62 படம் உருவாக உள்ள நிலையில் இதற்கான அறிவிப்புக்காக ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது இந்த படம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கடைசியாக வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் துணிவு.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. அதிலும் ஆக்ஷன், காமெடி என அனைத்திலும் அஜித் பட்டையை கிளப்பி இருந்தார். இப்போது துணிவு படத்துடன் ஏகே 62 படத்திற்கு கனெக்ட் உள்ளது. படத்தின் டைட்டில் மூலம் படக்குழுவினர் சஸ்பென்சை உடைக்க உள்ளனர்.

அதாவது ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மார்ச் மாதம் லைக்கா நிறுவனம் வெளியிட இருக்கிறது. மேலும் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக இருக்கிறது. மேலும் அருண் விஜய் மற்றும் அருள்நிதி வில்லனாக நடிக்கிறார்கள்.

இந்நிலையில் ஏகே 62 படத்தின் டைட்டில் டெவில் அல்லது டார்க் டெவில் என்றும் மற்றும் தீவினை, ரணம் வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் துணிவு படத்தில் அஜித்தின் கதாபாத்திரமான டார்க் டெவில் என்பதை இப்படத்தின் டைட்டிலாக வைக்கிறார்கள். இதனால் துணிவு மற்றும் ஏகே 62 படத்திற்கு ஏதாவது கனெக்ட் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் அல்லது திரிஷா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இவர்கள் இருவரிடமுமே தற்போது படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும் அறிவிப்பு வெளியான உடனே படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

அஜித்தின் துணிவை விட இந்த படம் ரசிகர்களை ஒரு படி அதிகம் கவர வேண்டும் என்ற முனைப்பில் மகிழ்திருமேனி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாராம். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம் என அஜித்தின் ஏகே 62 தரமான அப்டேட் மிக விரைவில் ரசிகர்களை வந்தடைய காத்திருக்கிறது.

வெளிப்படையாக, அஜித் மற்றும் தயாரிப்பாளர்கள் ‘AK 62’ என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்பவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ தலைப்புடன் வெளியிட காத்திருக்கிறார்கள். AK 62, நாம் அனைவரும் அறிந்தபடி, விக்னேஷ் சிவனுடன் தொடர்புடையது, இப்போது அவர் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதால், படத்தின் சரியான தலைப்புடன் வெளியீட்டு விழா இருக்க வேண்டும் என்று குழு கருதியது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்