30.5 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாஏகே 62 படத்தின் டைட்டில் இதுவா வைரலாகும் புகைப்படம்

ஏகே 62 படத்தின் டைட்டில் இதுவா வைரலாகும் புகைப்படம்

Date:

தொடர்புடைய கதைகள்

இறுதி கட்டத்தை நெருங்கும் மாவீரன் படத்தை பற்றிய முக்கிய...

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை முடித்த பிறகு,...

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

ரஜினி மகள் வீட்டில் கொள்ளை பெரும் பரபரப்பு !...

பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது...

அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பதில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனி AK62 படத்தை இயக்கவுள்ளார், மேலும் இந்த திட்டத்தின் பூஜை நேற்று லைகா புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் குறைந்த அளவிலான பங்கேற்பாளர்களுடன் நடந்தது. ஏகே62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வெளியிடப்படாத காரணங்களால் படத்தயாரிப்பாளர் திட்டத்தில் இருந்து விலகினார்.

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் இசையமைக்க இருந்தது.

ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன தேதியில் கதையை ரெடி பண்ணாததால் ஏ கே 62 திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்று கூறப்பட்டது அது மட்டுமல்லாமல் அனிருத்தும் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. மேலும் ஏ கே 62 திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி மற்றும் காமெடி நடிகராக சந்தனம் அவர்கள் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகி விட்டதால் அந்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருந்தது. இந்த நிலையில் ஏகே 62 திரைப்படத்தை மகிழ் திருமேனி அவர்கள் இயக்க இருப்பதாக ஒரு உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகி இருந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தை நடிகர் அஜித் அவர்கள் தீபாவளிக்குள் முடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டதாக கூறப்பட்டது அதுமட்டுமல்லாமல் ஏ கே 62 திரைப்படத்தை தீபாவளியை முன்னிட்டு வெளியிட வேண்டும் என்றும் தீவிரமாக இருக்கிறாராம் நடிகர் அஜித்.

இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கப்படாத நிலையில் எப்படி தீபாவளிக்குள் முடிக்க முடியும் என்று பலரும் கூறி வந்தனர் இதனை தொடர்ந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது அதாவது ஏகே 62 படத்தின் பூஜை நேற்று நடந்து முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது அஜித் குமாரின் அலுவலகத்தில் தான் ஏகே 62 திரைப்படத்தின் பூஜை மிக எளிமையாக நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஏகே 62 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி தான் என்பது உறுதியாகிவிட்டது என்பது குறிப்பித்தக்கது.

இந்நிலையில் அஜித் 62 படத்தின் டைடில் “டெவில் “என புகைப்படம் கசிந்துள்ளது இதோ உங்கள் பார்வைக்கு

படத்தின் நடிகர்கள் மற்றும் வகை பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மார்ச் மாதத்தில் திட்டத்தின் தலைப்பு அறிவிப்புடன் அவை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மகிழ் திருமேனி கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் ‘கலக தலைவன்’. தீய கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போரிடும் ஒரு விழிப்புணர்வின் பயணத்தைத் தொடரும் திரில்லர்

சமீபத்திய கதைகள்